கோவை மத்திய சிறையில் இந்து சிறைவாசிகளை கொடுமை படுத்தி சிறை நிர்வாகம் மனித உரிமை மீறல்- மாநிலத் தலைவர் அறிக்கை

30.04.2020

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

தற்போது கொரோனா
காரணமாக144
லாக்டவுன்
அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்சிறையில்
சிறைவாசிகளை
சந்திக்கும்
நேர்காணல் மற்றும்
வழக்கறிஞர்கள்
நேர்காணல் தடை
செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தினரை காணமுடியாத
சூழ்நிலையில் சிறைவாசிகள்
மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது
இயல்பு.

இத்தகைய நேரத்தில்
சிறைவிதிகளுக்கு உட்பட்டு அவர்களை மனஅழுத்தத்தில்
இருந்து மீட்பது சிறைத்துறையின்
கடமை.

அதற்கு நேர்மாறாக மனு இல்லாத காரணத்தினால்
சிறைவவாசிகளை
மனிதாபிமானமின்றி
கொடுமைகளுக்கு
ஆட்படுத்துகின்றனர்.
கடந்த காலங்களில்
இந்து சிறைவாசிகளை
கொடுமைப்படுத்துவதும்
தனிமைச்சிறையில்
அடைப்பதும் வாடிக்கையாக
இருந்தது.

சிறைத்துறை அதிகாரிகளிடம்
இந்துமுன்னணி பேச்சுவார்த்தை
நடத்தி இந்து கைதிகளுக்கு
பாதுகாப்பை ஏற்படுத்தியது.

இதே சிறைத்துறை
முஸ்லீம் சிறைவாசிகளுக்கு
செய்து தந்த செளகரியங்கள்
ஏராளம். ஒன்று சேர்ந்து தொழுக அனுமதிப்பது மேலும்
ரம்ஜான் காலங்களில்
பிரியாணி செய்ய அனுமதிப்பது என
தாராளம் காட்டியது.

இந்து சிறைவாசிகள் சிறையில் பல ஆண்டுகளாக நடத்தி வந்த
கூட்டுவழிபாட்டுக்கு
தடைவிதிக்கப்பட்டது.

சிறையில் முஸ்லீம் மத சின்னங்களை அணிய அனுமதிக்கும் சிறை நிர்வாகம் .
காவி வேஷ்டி செந்தூரம் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை.

பல ஆண்டுகளாக இந்து இயக்கங்கள் சார்பில் தீபாவளி
பண்டிகைக்கு ஆயுள் தண்டனை சிறைவாசிகளுக்கு
புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வந்ததை இந்த ஆண்டு அனுமதிக்க மறுத்து அநீதி செய்தது
சிறைநிர்வாகம் .

மேலும் கைது செய்யப்பட்டு
சிறைக்கு செல்லும் சிறைவாசிகளை
சோதனை செய்யும் அறையில் வைத்து சிறைக்காவலர்கள் மற்றும்
கான்விக்ட் வார்டன்கள்
கடுமையாக தாக்குவது
என பல்வேறு கொடுமைகளை
அரங்கேற்றி வருகிறது
சிறை நிர்வாகம் .

சென்ற மாதம் கோவையில்
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும்
RSS நிர்வாகி சூரிஆகியோரை
தாக்கி கைது ஆன முஸ்லீம்
சிறைவாசிகளை கோவை சிறையில் சுதந்திரமாக இருக்க
சலுகை வழங்குகிறது
சிறைத்துறை .

அதே சமயம் கடந்தமாதம்
கைது செய்யப்பட்டு
குண்டர்சட்டத்தில்
அடைக்கப்பட்டுள்ள
இந்து சிறைவாசிகளை
தனிமை சிறையில்
அடைத்து வைத்து கொடுமை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகிறது.

எனவே கோவை மத்திய
சிறையில் நடைபெறும்
மதரீதியான
பாரபட்சத்தையும்
மனித உரிமை மீறலையும்
தமிழ அரசும்,சிறைத்துறையும்
தலையிட்டு முடிவுக்கு கொண்டு
வர வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாக
விரைவில் இந்துமுன்னணி சார்பாக மனித உரிமை
ஆணையத்திடம் புகார் அளிக்கும் என தெரிவித்து
கொள்கிறோம்.

சிறைத்துறை வார்டன் பூபால்
அவர்கள் முஸ்லீம்களால்
தாக்கப்பட்ட போது கண்டனக்குரல் கொடுத்து
சிறைத்துறைக்கு ஆதரவாக
களமிறங்கிய இயக்கம் இந்துமுன்னணி.
இதையெல்லாம் மனதில் கொண்டு சிறைத்துறை
நிர்வாகம் இந்து கைதிகளை
தனிமை சிறையில்
அடைத்து கொடுமைபடுத்துவதை
நிறுத்தி கொள்ள வேண்டுமென இந்துமுன்னணி
கேட்டுக் கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம் மாநிலத் தலைவர் இந்துமுன்னணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *