இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
26-2-2019
பத்திரிகை அறிக்கை
பாகிஸ்தானில் உள்ள பயங்கவாதிகள் முகாம்கள் அழிப்பு!
இந்திய விமானப்படைக்குப் பாராட்டுகள்..
பத்து நாட்கள் முன்பு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். இராணுவ வீரர்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடந்தவுடனேயே இஸ்லாமி பயங்கரவாத அமைப்பு, இதனை தாங்கள் தான் நடத்தியது என மார்தட்டி அறிவித்தது. ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் பாகிஸ்தானில் தான் இருப்பதும், அந்த அமைப்பின் பயிற்சி முகாம்கள் இந்திய எல்லையை ஓட்டி பாகிஸ்தானில் இருப்பதும் உலகறிந்த உண்மை.
இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. உடனடியாக இதற்கு பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கருத்து கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தி, அவற்றை அழித்துள்ளது இந்திய விமானப் படை. இதனை அனைவரும் வரவேற்பார்கள். பயங்கரவாதம் வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை, அதனை தான் இந்திய இராணுவமும் செய்துள்ளது.
நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு விஷயங்களில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை என்பதை இந்திய அரசு வெளிப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.
இந்நேரத்தில் பாரத அரசிற்கும், இராணுவத்திற்கும் ஒவ்வொரு தேசபக்தனும் உறுதுணையாக இருந்து, தேச நலனுக்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போம். இந்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இந்து முன்னணி பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)