23.10.19இந்து முன்னணி இந்து மதத்தை வளர்க்கவும், பரப்பவும் மற்றும் இந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்து பேச உள்ள ஒரு அமைப்பு ஆகும்.தமிழகத்தில் உள்ள கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளில் இளைஞர் அணி உள்ளதுபோல் இந்து முன்னணியிலும் இந்து இளைஞர் முன்னணி உள்ளது (HYF).இந்து இளைஞர் முன்னணி சார்பில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோல் அக்டோபர் 15ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் பிறந்த தினம் தேசிய அர்ப்பணிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12 ம் தேதியை தேசிய இளைஞர் தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது . அன்றைய தினமும் HYF சார்பாக சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது .தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் இந்து இளைஞர் முன்னணி இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை பள்ளி கல்லூரிகளில் நடத்துவதாக கற்பனையாக கூறி அதைப் பற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வருகிறது.இதே கல்வித்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் ரக்ஷாபந்தன் (சகோதரத்துவ தினம்) விழாவிற்கு முன்னதாக மாணவர்கள் வண்ணக் கயிறு(கலர்) கட்ட கூடாது, இது சாதியத்தை குறிக்கிறது என்ற பொய் அறிக்கையை வெளியிட்டது இதையும் ஊடகங்கள் தெரிவித்தன.இப்படி தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இந்து மதத்திற்கு எதிரான கிறிஸ்தவ அதிகாரிகள் தங்கள் பதவியை பயன்படுத்தி இன்று விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்1.அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளில் 95% மாணவர்கள் இந்துக்கள் .ஆனால் அவர்களுக்கு கட்டாயமாக கிறிஸ்தவ (இயேசு ஜெபம்) பிரார்த்தனை நடத்துகின்றனர்.2.இப்பள்ளிகளில் பைபிள் போதனையும், பைபிள் விநியோகம் நடைபெறுகிறது3.இந்து மாணவிகள் பூ வைக்கக் கூடாது, பொட்டு வைக்கக்கூடாது, மஞ்சள் பூசக்கூடாது, மருதாணி வைக்க கூடாது என்று தண்டிக்கப்படுகிறார்கள்4.இந்து மத கடவுள்களை மட்டம் தட்டிப் பேசுகிறார்கள்5.அரசு பள்ளிக்கூடங்களிலும் பைபிள் வினியோகம் அடிக்கடி ஆங்காங்கே நடக்கிறது இதை எதிர்த்து இந்து முன்னணி நூற்றுக் கணக்கான இடங்களில் காவல்துறையிடம் புகார் செய்துள்ளது. கல்வி அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளது.6.கிறிஸ்தவ பள்ளிகள் சுதந்திர தினத்தையும் ,குடியரசு தினத்தையும் முறையாக கொண்டாடுவதில்லை .
இதை எதிர்த்து இந்து முன்னணி பல இடங்களில் போராடி உள்ளது.7. கிறிஸ்தவப் பள்ளி கல்லூரிகளில் கிறிஸ்தவ மத போதனை கட்டாயப் படுத்தப் படுகிறது.8.முஸ்லீம் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை விடுகிறார்கள்.9.கல்லூரிகளில் கூட வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்களுக்கு தொழுகை நேரம் ஒதுக்கி விடுமுறை அளிக்கிறார்கள். இது சில இந்துக் கல்லூரியிலும் நடக்கிறது .10.நக்சல் அமைப்புகளும், இந்து விரோத அமைப்புகளும் (SFI, DYFI etc) பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேச விரோத கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்11. நக்சல் வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் மாணவர்கள் விடுதிகளில் தங்கி இருந்து தேசவிரோத, இந்து-விரோத கருத்துகளை பரப்பி வருகின்றனர்.12.முஸ்லீம் அமைப்புகளும், கிறிஸ்தவ அமைப்புகளும் பள்ளி கல்லூரிகளில் செயல்படுகின்றனர்.இவ்வாறு மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் தமிழகத்தில் நெடுங் காலமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கெல்லாம் எந்த சுற்றறிக்கையையும் , எந்த விளக்கத்தையும் கேட்டு கடிதம் எழுதாத கல்வித்துறை இப்போது மட்டும் அறிக்கை கேட்பது ஏன்?உண்மையிலேயே இது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தானா? இல்லை அங்கே வேலை செய்யும் விஷமிகள் வேண்டுமென்றே இதுபோன்ற செய்திகளை ஊடகத்திற்கு கொடுத்தார்களா? என்ற ஐயம் ஏற்படுகிறது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.இந்து இளைஞர் முன்னணி பள்ளி, கல்லூரிகளுக்குள் செயல்படவில்லை. இது இளைஞர்களுக்கான பொது அமைப்பு. இதைப்பற்றி மட்டும் அறிக்கை பள்ளிக்கல்வித்துறை கேட்பது ஏன்?ஆகவே பள்ளி கல்வித்துறை இந்து விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அதனால் தான் சிறுபான்மை மதவெறி பிடித்த அதிகாரிகள் துணிச்சலுடன் விதிகளை மீறி இதுபோன்ற கடிதங்கள் எழுதுகிறார்கள்.தமிழக கல்வித்துறை மொத்தமாக மதவெறி பிடித்த கிறிஸ்தவ அதிகாரிகளின் கோரப் பிடியில் உள்ளது .தமிழக அரசு இந்த அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.இந்த கிறிஸ்துவ மதவெறியர்களிடமிருந்து மாணவர்களையும் கல்வித் துறையையும் காப்பாற்ற இந்துக்கள் முன்வர வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது.தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் இதுபோன்ற எந்த அறிக்கையும் பள்ளிக்கல்வித்துறை தரவில்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அதுவும் ஊடகங்களில் வந்துள்ளது மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு இந்து முன்னணி பேரியக்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.ஒருவேளை இந்த செய்தி பள்ளிக்கல்வித்துறை வெளியிடாத பட்சத்தில் பொய்யான தகவல்களை தரும் ஊடகங்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் இந்துமுன்னணி கேட்டுக் கொள்கிறதுதாயகப் பணியில்சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
Tag Archives: crypto Christians
ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை
மக்கள் நீதி மையம் கட்சியினுடைய தலைவராக இருக்கக் கூடிய திரைப்பட நடிகர் கமலஹாசன் அவர்கள் நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பொழுது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய அரசியல் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் எவ்வளவு மதவெறி கொண்டதாக இருக்கும் தான் முன்னெடுக்க கூடிய அரசியல் வகுப்புவாத மதவாத அரசியல் என்பதை வெட்டவெளிச்சம் போட்டு நேற்று காட்டியுள்ளார்.
முஸ்லிம்கள் அதிகமாக கூடி இருக்கக்கூடிய இடத்தில் அவர்களுடைய ஓட்டுக்களை கவர வேண்டும் என்பதற்காக சம்பந்தமே இல்லாமல் முதல் தீவிரவாதி ஹிந்து என்று பிதற்றியுள்ளார்.
திரு கமலஹாசன் அவர்கள் தன்னுடைய விஸ்வரூபம் படத்திற்காக அனுபவித்த பிரச்சினைகளை மறந்துவிட்டார் போலும்.
நவகாளிப் படுகொலைகளில் ஹிந்துப் பெண்கள் 10 ஆயிரம் பேர் கற்பழிக்கப்பட்டதை மறந்து விட்டாரா? அந்த வரலாறு அவருக்கு தெரிந்த ஒன்று ,ஆனால் கேவலமாக அரசியல் செய்ய வேண்டி பேச வேண்டாத ஒரு விஷயத்தை பேசக் கூடாத இடத்தில் பேசி தனது அரசியல் முதிர்ச்சி இன்மையை காட்டியிருக்கின்றார் திரு கமல்ஹாசன்.
இப்படி பிதற்றி ஹிந்து சமுதாயத்தை கேவலப்படுத்தியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கொண்டு அவர் பிரச்சாரத்தில் இதுபோன்று தொடர்ந்து இந்து விரோத கருத்துகளை சொல்லாமல் இருப்பதற்கு தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .
திரு கமலஹாசன் அவர்களுடைய இந்த தவற்றை உணர்ந்து உடனடியாக மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி எச்சரிக்கின்றது.
மேலும் இதுபோன்று கமலஹாசன் தொடர்ந்து ஹிந்து மத துவேஷத்தில் பிரச்சாரம் செய்தால் அவரை ஹிந்து முன்னணி மிகக் கடுமையாக எதிர்த்து அவர் செல்லும் இடங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு உள்ளாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்
கமலஹாசன் வரலாறு தெரியாதவர் அல்ல விவரம் தெரிந்த அவர் இவ்வாறு பேசியிருப்பது தனக்கு ஒரு மலிவான விளம்பரம் தேட வேண்டி தான் இவ்வாறு பேசியிருக்கிறார் என்று ஹிந்து முன்னணி கருதுகின்றது .
இன்றைக்கு அரசியல் வெளிச்சம் தன் மீது படவேண்டும் என்று சொன்னால் அவருக்கு ஹிந்து சமுதாயத்தின் உடைய நம்பிக்கைகளை பழிப்பது ஹிந்து கடவுளை தூற்றுவது ஹிந்துக்களை கேவலமாகப் பேசுவது என்பது ஒரு வாடிக்கையான விஷயம் ஆகிவிட்டது குட்டக் குட்டக் குனிந்து கொண்டிருக்க ஹிந்துக்கள் இளித்தவாயர்கள் அல்ல ஹிந்துக்கள் ஒன்றுதிரண்டு இதுபோன்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் கற்க கற்பிக்கின்ற சூழ் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.
இதனுடைய விளைவை ஹிந்து விரோத அரசியல் செய்பவர்கள் கண்டிப்பாக சந்திக்க வேண்டி வரும் என்று இந்து முன்னணி எச்சரிக்கின்றது.
இந்து சமய அறநிலையத்துறையில் பணி செய்யும் வேற்று மதத்தினரைக் (கிரிப்டோ கிறிஸ்தவர்கள்) கண்டறிந்து வெளியேற்ற வேண்டும்- வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை
இந்து சமயப் பணி செய்யும் துறையாக இது இருக்கிறது. இதற்காக பிரத்யேக தேர்வு நடத்தி, இந்துக்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை பணி என்பது அரசு பணி என்பது மட்டுமல்ல. இந்து சமயப்பணி என்பதால், அதில் பணியாற்றுபவர்களுக்கு இந்து சமயத்தின் மீது பற்றும், நம்பிக்கையும், ஈடுபாடும் இருத்தல் அவசியம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அத்தகைய பணியில் சேர்ந்தவர்கள் தங்களது மதம் சம்பந்தமான உண்மையான விவரத்தை மறைத்திருந்தால் அது குற்றமாகும்.
அப்படியில்லாமல், வேலையில் சேர்ந்தபின்னர் இந்து சமயத்தைவிட்டு வேற்று மதத்திற்கு மாறியிருந்தால், தார்மீக ரீதியில் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் பணியிலிருந்து விலகியிருக்க வேண்டும். தனக்கும் உண்மையாக இல்லாமல், தான் செய்யும் பணிக்கும் உண்மையாக இல்லாதவர்களை இந்து சமய அறநிலையத்துறை, பணியிலிருந்து நீக்குவது கடமையாகும்.
அதுதான் இந்து சமய அறநிலையத்துறையின் சட்டத்திட்டங்களின்படி சரியான நடவடிக்கையாக இருக்கும்.
அதற்குக் கண்டனம் தெரிவித்து அகில இந்திய கிறிஸ்தவர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு கடிதம் ஊடகங்களில் வந்துள்ளது. இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தின் திட்டமிட்ட சதியானது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
கிறிஸ்தவர்கள், சாமி பிரசாதம் எனக் கொடுத்தால்கூட வாங்க மாட்டார்கள். ஆனால், பக்தர்கள் அளிக்கும் காணிக்கையில் இருந்து தரப்படும் ஊதியத்தை பெறலாமா?
இந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையான, இந்து கோயில்கள் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கு, இந்தப் பிரச்சனை வலுசேர்ப்பதாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, இந்து சமய அறநிலையத்துறை இது குறித்த முறையான விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். அப்படி மறைமுக கிறிஸ்தவர்களாக இருப்போரை உடனடியாக பணியிலிருந்து நீக்கும் நடவடிக்கையை, ஒளிவு மறைவின்றி எடுக்க தயக்கம் காட்டக்கூடாது என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.