Tag Archives: மௌல்வி

தமிழக முதல்வருக்கு மாநிலத் தலைவர் கடிதம்- மதம் பிரச்சாரம் மூலமாக கொரோனா- சந்தேகம் எழுகிறது…

அனுப்புநர்:

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர் இந்துமுன்னணி
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
தமிழ்நாடு அரசு
அன்புடையீர் வணக்கம்..
கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் அரசின் எந்தவித அனுமதியும் பெறாமல் வெளிநாட்டு முஸ்லிம்கள் அடங்கிய மதப் பிரச்சார குழுக்கள் தங்கி இருந்ததும் அவர்களுக்கு கொரானா வைரஸ் தொற்று இருந்து, அவர்கள் மூலம் பலருக்கும் கொரோனா பரவி இருப்பதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, சேலம், வேலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என பல மாவட்டங்களில் மதப்பிரச்சாரம் செய்ய இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளைச் சார்ந்த மௌல்விகள் பதுங்கி இருந்ததை அந்த ஊர் மக்களின் உதவியோடு காவல்துறை கண்டுபிடித்துள்ளது.
தற்போது அவர்களையும், அவர்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக அரசின் சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் பல மசூதிகளில் கூட்டமாக வெளிநாட்டு முஸ்லிம்கள் தங்கியிருப்பதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
இவர்கள் எந்த அனுமதியில் இந்தியாவிற்குள் வந்தார்கள்? சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் வந்து மத பிரச்சாரம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் இத்தனை நபர்கள் வந்திருப்பதும் அவர்கள் மூலமாக கொரோனா பரவியிருப்தும் பலத்த சந்தேககங்களை ஏற்படுத்தியுள்ளது.
“பயோ ஜிகாத்” என்ற பெயரில் திட்டமிட்டு கொரானா வைரசை பரப்பியதாக மக்கள் பேசி வருகின்றனர். இது பற்றியும் அரசு விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். இவர்கள் சுற்றுலா விசாவில் வந்தது உறுதியானால் வழக்கு பதிவு செய்து கைது செய்து வேண்டும்.
வழிபாட்டுத் தலங்களை சோதனை செய்து கூட்டங்கள் கூடுவதை தடுக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு முஸ்லிம்கள் இருந்தால் கைது செய்து விசாரிக்க வேண்டும் எனவும், கொரோனா பரவுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணியில்
காடேஸ்வரா சி சுப்பிரமணியம்