Tag Archives: #புத்தாண்டு

நம்பிக்கையோடு புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். ஸ்ரீ சார்வரி புத்தாண்டு வாழ்த்துக்கள் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

13.04.2020

சோதனை ஒழியட்டும் – நாடு செழிக்கட்டும் – நம்பிக்கையோடு புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். ஸ்ரீ சார்வரி புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் அறிக்கை

நாடு கொரானா எனும் கொடும் நோயின் பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்த சூழ்நிலையில் இனி பிறக்கின்ற ஸ்ரீ சார்வரி ஆண்டு இந்த நோயினை அழித்து மக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கின்ற ஆண்டாக இருக்க வேண்டுமென அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

பொருளாதாரப் பிரச்சனையிலிருந்து மக்கள் அனைவரும் மீண்டு, சகல விதமான செல்வங்களையும் இந்த ஆண்டில் பெற இறைவன் அருள்புரிய வேண்டும்.

நம்முடைய பண்பாட்டு ரீதியிலான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களை அனைவரும் கடைபிடிக்க இந்த ஆண்டில் சபதமேற்போம்.

நமது வாழ்க்கை முறை மற்றும் நமது பழைய உணவு பழக்கவழக்கங்கள் நம்மையும் நம் சந்ததியினரையும் இது போன்ற கொடிய நோய்களிடமிருந்து காப்பாற்றும்.

நம்பிக்கையோடு புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். பிறக்கின்ற புத்தாண்டு அனைத்து விதமான சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுகின்ற ஆண்டாக அமையட்டும்.

அனைவருக்கும் சித்திரை 1 சர்வாரி ஆண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்