Tag Archives: தாமஸ் மவுண்ட்

பாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

12.06.2020
பாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை.
இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறிக்கை.

பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் சில ஊர்களின் பெயர்கள், அவர்களுக்கு வாயில் உச்சரிக்க வராததால், அவர்களுக்கு ஏற்ப பெயர் கொடுத்தனர்.

நீண்ட பாரம்பரியம் மிக்க ஊர்களின் பெயர் கூட மருவி ஆங்கிலேயர் உச்சரிப்புகளில் வழங்கி வந்தன. அதாவது தஞ்சாவூர் என்பது TANJORE என்று அழைக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மீண்டும் ஊர்களின் பெயர்களை மாற்றியமைத்துள்ளது.

இந்துமுன்னணி பேரியக்கம் தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

அதே சமயம் மிக நீண்ட பாரம்பரியம் மிக்க பல ஊர்கள் காலப்போக்கில் பெயரே மாற்றம் செய்யப்பட்டு வழங்கி வருகிறது.

இந்த மாதிரி பெயரே மாற்றப்பட்ட ஊர்களின் பாரம்பரியப் பெயரை மீண்டும் வைப்பது நமது பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியாகும் .

உதாரணத்திற்கு தற்போது புனித தோமையார் மலை என்பது பிருங்கி முனிவர் வசித்த பகுதியாகும். எனவே அதற்கு பிருங்கி மலை என்று வைப்பது நமது பண்பாட்டை மீட்டுகும் பணி.

ஆகவே தமிழக அரசு இத்தகைய பெயர் மாறிய ஊர்களின் பெயர்களையும் திரும்ப வைக்கவேண்டும் என இந்துமுன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.

வணக்கம்

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்.