Tag Archives: கோவில் நிலம்

மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ,  மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

04.04.2020மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் – மாநிலத் தலைவர்அன்புடையீர் வணக்கம்.நேற்றைய தினம் மத்திய அமைச்சர் தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களை மத்திய அரசின் தொல்பொருள் இலாகா கையகப்படுத்தும் என்று கூறியிருக்கிறார் .இந்து முன்னணி துவக்க காலம் முதல் சொல்லி வருகின்ற 12 கோரிக்கைகளில் ஒன்று அரசு ஆலயத்தை விட்டு வெளியேறவேண்டும்.மேலும் தமிழகத்திலுள்ள கோயில்களை எல்லாம் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் / ஐபிஎஸ் அதிகாரிகள், மடாதிபதிகள் கொண்ட ஒரு தனி சுதந்திரவாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும் என்பதே.இந்துக்களின் கோவில்களை தமிழக அரசின் ஊழல் மலிந்த இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிப்பதும், மத்திய அரசின் தொல்பொருள் இலாகாவிடம் செல்வதும் ஒன்றுதான்.அதனால் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்.திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு தமிழக கோவில்களை கையகப்படுத்தக் கூடாது என்று ஒரு அறிக்கை கொடுத்து இருக்கின்றார்.கடந்த 70 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு கோயில்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. சுவாமி விக்கிரகங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளன. கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை. ஊழல்கள் தலைவிரித்து ஆடின.இத்தனை ஆண்டு காலமாக திமுகவும், திரு.ஸ்டாலின் அவர்களும் வாய்மூடி,கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள். காரணம் அறங்காவலர் என்ற பெயரில் திமுக கட்சிக்காரர்கள் சுகபோகமாக வாழ்ந்து வந்தார்கள்.இப்பொழுது மத்திய தொல்பொருள் இலாகா எடுத்துவிட்டால் இவர்கள் கட்சிக்காரர்கள் அறங்காவலர்களாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் திரு.ஸ்டாலின் அவர்கள் கோவில்களைப் பற்றி அறிக்கை தந்திருக்கிறார்.உண்மையிலே அவருக்கு கோவில் மீது அக்கறை இருக்குமானால் தமிழகத்தில் கொள்ளை போன விக்கிரகங்கள்,கோவில் சொத்துக்கள்,கிட்டத்தட்ட காணாமல் போன 3 ஆயிரம் கோவில்கள் இவற்றை கண்டுபிடிக்க குரல் கொடுப்பாரா? என்பது சாமானிய இந்துவின் கேள்வி.இந்துமுன்னணி கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள கோவில்களுக்கும், மடங்களுக்கும் பாதுகாப்பாகவும், அநீதிகளை எதிர்த்து குரல் கொடுத்தும் வருகின்றது.அதேபோல மத்திய தொல்பொருள் இலாகா கோவிலை கையகப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ எதுவானாலும் இந்து கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் .சுதந்திர வாரியம் நிறுவ வேண்டும் என்பதே இந்து முன்னணி கோரிக்கை.தாயகப் பணியில்காடேஸ்வரா சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்

கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுப்பது கோவில்களை அழிக்கும் தமிழக அரசின் சதித் திட்டம் – இந்துமுன்னணி கண்டனம்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்கக் அனுமதிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில் 600 ஏக்கரா நிலங்கள் மட்டுமே கொடுக்கப் போவதாக தமிழக அரசு உயர் நீதி மன்றத்தில் வாதிட்டுள்ளது.

இது கோயில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி. மேலும் அரசின் இந்த முயற்சி சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஏழைகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டுமெனில் அரசுப் புறம்போக்கு நிலங்களை வழங்கலாம்.

மாறாக நம் முன்னோர்கள் கோவில் வழிபாடு சிறப்பாக நடக்கவேண்டும் என்பதற்காக தானம் கொடுத்த நிலத்தை அக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கலாமா? கோவில் நிலத்தை அழித்தால் வரும் காலத்தில் கோவில் அழிந்துபோகும்.

ஏற்கனவே பலமுறை இதைப்பற்றி தொடர்ந்து இந்துமுன்னணி அரசுக்கு எடுத்துக் கூறியும், அறிவுறுத்தியும் வந்துள்ளபோதும் பக்தர்களின் மனத்தை வேதனைபடுத்தும் வகையில் அரசு உயர்நீதி மன்றத்தில் இவ்வாறு கூரியுள்ளது மிகவும் வன்மையாக கண்டிக்கத்த தக்கது.

ஆகவே இந்த நிலைப்பாட்டை அரசு கைவிடவேண்டும் எனவும் , அரசாணையை ரத்து செய்யவேண்டும் எனவும் இந்துமுன்னணி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை? – இணைவீர் இந்துமுன்னணி

இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை?

இது அரசியல் கட்சி அல்ல –
இது இந்துகளுக்கான அமைப்பு

1. நமது உறவினர்களும், நண்பர்களும் மதம் மாறாமல் இருக்க…. தடுக்க

2. இந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சட்ட விரோத வழிபாட்டு கூடங்கள் உருவாவதைத் தடுக்க

3. இந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களில் வேற்று மதத்தினர் தலையீடு இல்லாமல் இருக்க

4. நம் கடவுள்களையும், குலதெய்வங்களையும் இழிவாக பேசுபவர்களை தட்டிக் கேட்க

5. வேற்று மதத்தினரின் தலையீட்டில் திருவிழாக்கள் நின்றுபோகும்போது இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் திருவிழாக்களை நடத்த

6. நம் பெண் பிள்ளைகள் வேற்று மதத்தினரின் திட்டமிட்ட நாடக காதலில் விழாமல் (லவ் ஜிகாத்) விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பாற்றிட

7. பள்ளிகளில் நம் சமயம் சார்ந்த பூ, பொட்டு, வளையல் அணிந்து வருவதற்கு மட்டும் தடை விதிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை எதிர்த்து கேள்வி கேட்க

8. கோவில் கும்பாபிஷேகம், கோவில் சார்ந்த விழாக்களை தடுக்கும் அறநிலையத்துறை மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி விழாவினை நடத்த

9. கோவில் மற்றம் கோவில் நிலங்களை பாதுகாக்க

10. தினமும் நமது கிராம கோவில்களில்
ஓரு வேளையாவது விளக்கு எரிய ( ஏற்றிட)…

11. நமது இந்துக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எந்த அரசியல்வாதியும் முன் வரமாட்டார்கள் அப்போது நம்மை பாதுகாத்திட , நமக்காக வாதாட, போராட, பரிந்து பேச இந்து முன்னணி மட்டுமே உள்ளது.

12. கட்சியால் பிளவு பட்டாலும்
மதத்தால் ஒன்று படுவோம்

13.இந்துமதத்தின்பெருமைகளயும் ,அதற்கு வரும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ள… புரிந்து கொள்ள

நாம்
நமது ஊர் கோயில்களில்
நாம் வாரந்தோறும் சந்திக்க…..
இணைவீர்…..இந்து முன்னணியில்…

தேசம் காக்க, தெய்வீகம் காக்க

தர்மம் காக்க அதர்மம் அகற்ற
இந்துமுன்னணி
தமிழ்நாடு

தொடர்புக்கு

hmrss1980@gmail.com

9047027282

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்
இந்துமுன்னணி
திருப்பூர்

31.10.19

பத்திரிகை அறிக்கை

திருடனுக்கு விருது வழங்குகிறதா? தமிழக அரசு! – கோவில் நிலங்களை பட்டா போட்டு வழங்கும் அரசின் முடிவுக்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. அதில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு, அதற்கான பட்டா வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

இந்துமுன்னணி பேரியக்கம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாநில செயற்குழுவில் கண்டன தீர்மானம் இயற்றி அப்போதே அதனை குறிப்பிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பியது.

தற்போது அதே அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், மீண்டும் தமிழக அரசு கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு தருவதாக வாக்குமூலம்( affidavit) தாக்கல் செய்துள்ளது.
இதை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
இது திருடனுக்கு விருது வழங்குவது போல கேவலமான செயல் . ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவித்து அவர்களை அரசே அங்கீகரித்தது போல ஆகிவிடும்.

கோவில்களில் பூஜைகள், திருவிழாக்கள் தடையின்றி நடைபெற நமது முன்னோர்கள் கோவில்களுக்கு நிலங்களை தானமாக தந்து, அதன் வருமானத்தினை கோவில்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர் .

அந்த கோவில் நிலங்களை, சொத்துக்களை பாதுகாக்க அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை .

கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ளவர்களை அகற்றி, நிலங்களை மீட்டு, தண்டனை வாங்கித் தருவது தான் சரியான நடவடிக்கை .ஆனால் தற்போது நேர்மாறாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரும்பான்மையான ஆக்கிரமிப்பாளர்கள் அரசியல் கட்சியினர் என்பதாலும், அவர்கள் தங்களது பினாமிகளை வைத்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவதால் அரசு அவர்களை திருப்திப்படுத்த முயல்கிறதோ? என்ற ஐயம் ஏற்படுகிறது.
மேலும் உள்ளாட்சித் தேர்தலை கணக்கில்கொண்டு அரசியல் நடத்தும் முயற்சியை அரசு மேற்கொள்கிறதோ? என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் கோவில்களுக்குச் சொந்தமான 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில் 1லட்சம் ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்ட நிலையில், அரசின் இந்த நிலைப்பாடு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கோவில்களை அழிக்கக்கூடிய இந்த செயலால் பக்தர்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் .அரசின் இந்த செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் .

ஆகவே அரசு இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வாக்குமூலத்தை(affidavit) திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

மேலும் இந்த அடாத செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்தர்கள், ஆன்மீக அன்பர்களை ஒன்றிணைத்து மாவட்டம்தோறும் வருகின்ற 4 .11. 19 – திங்கட்கிழமை அன்று ஆட்சேபனை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.

அதனைத் தொடர்ந்தும் அரசாணையை அரசு ரத்து செய்யாத பட்சத்தில் இந்து முன்னணி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை பக்தர்களுடன் சேர்ந்து முன்னெடுக்கும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .

தெய்வீக பணியில்

காடேஸ்வரா.சி. சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம்- இந்து முன்னணி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் பகுதியில் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

அந்த கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஊதியூர் கிராமத்தை சுற்றி உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன.

இதில் ஊதியூர் மலைக்கு அருகே உள்ள 98 ஏக்கர் கோவில் நிலத்தை தனியார் பால் நிறுவனம் ஆக்கிரமித்து அதில் தொழிற்ச்சாலை கட்டியுள்ளனர்.

இதை அறிந்த இந்து முன்னணியினர் தனியார் பால் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடந்தனர்

நேற்று இந்து முன்னணியினர் ஊதியூரில் கோவிலில் வழிபாடு நடத்த முடிவு செய்தனர் அதை அறிந்த தனியார் பால் நிறுவனத்தினர் அங்கு உள்ள திமுக நிர்வாகிகள் சிலரிடம் பெரிய அளவில் பணத்தை கைமாற்றி உள்ளனர் அவர்கள் ஒரு நபருக்கு 500 ரூபாய் வரை கொடுத்து இந்து முன்னணியினருக்கு எதிராக கோசம் எழுப்ப ஆட்களை திரட்டி கோவில் முன்பு காத்திருந்தனர்.

இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க 200 க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் கோவிலை சுற்றி பாதுகாப்பிற்காக குவிக்கபட்டனர்.

இந்து முன்னணியினர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு வரும்பொழுது தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் கோசம் எழுப்ப ,

இந்து முன்னணி தலைவர் அந்த மக்களிடம் பேசினார் அப்பொழுது அவர் கூறுகையில் (நாங்கள் உங்களுக்காக தான் போராடுகிறோம் , உங்கள் கோவில் நிலத்தை மீட்க தான் நாங்கள் நினைக்கிறோம் , நமது கோவில் நிலத்தில் அந்நிய நிறுவனம் வருவது நமக்கு நல்லதல்ல அந்த நிறுவனம் நிலத்தடி நீரை உறுஞ்சி நமது விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் , பணம் கொடுத்தால் உங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளவனுக்கு ஆதரவாக இப்படி கோசம் எழுப்புவீர்களா ? என்று பல கருத்துக்களை கூறினர் )

அவர் பேசிக்கொண்டிருக்கும் போது அவரை அவமதிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் சிலர் தகாத வார்த்தைகளில் பேசினர்

தனியார் நிறுவனத்திடம் இருந்து கோவில் நிலத்தை மீட்காமல் விடமாட்டோம் என்று இந்து முன்னணியினர் கூறியுள்ளனர்

இந்த சம்பவம் பற்றி அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டபோது அனைவரும் இந்து முன்னணியினரின் செயல்பாட்டிற்கு ஆதரவாகவே கருத்துக்களை கூறினர்.

கொங்கு பகுதிகளில் இந்து முன்னணி அசுர பலத்துடன் வளர்ந்து வருகிறது என்பது இந்த சம்பவத்தின் மூலம் உறுதியாகிறது.