Tag Archives: #காவல்துறை

மாநிலத் தலைவர் அறிக்கை – ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கை பதிவிற்கு இந்துமுன்னணி பொறுப்பாளர் மீது காவல்துறை வழக்கு- இந்துமுன்னணி கடும் கண்டனம்

06.06.2020இராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் அருகே இராதனூர் என்ற கிராமத்தில் கடந்த 31.5.2020 அன்று காளியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், முருகன், காளியம்மன், நாகநாதர் ஆகிய சிலைகளை சமூக விரோதிகள் உடைத்துள்ளனர்.அந்த ஊர் பெரியவர்கள் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் கே.இராமமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு விசயத்தை கூறவும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போன் மூலம் சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது.அதன் பின்னர் இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராமமூர்த்தி தனது முகநூல் பக்கத்தில் இராதனூரில் சிலைகளை உடைத்த பயங்கரவாதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2.6. 2020 அன்று பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் எந்த மதத்தை குறிப்பிட்டோ, வேறு யாரையும் குறிப்பிட்டு பதிவிடவில்லை. மேலும் தனது பதிவில் சட்டவிரோதமாக எதையும் குறிப்பிடவில்லை.இந்நிலையில் அவர் மீது மேற்படி முகநூல் பதிவுக்காக கடந்த 3.6..2020 தொண்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்து முன்னணி இந்துக்களுக்காக வாதாட போராட பரிந்து பேசக் கூடிய அமைப்பு. அதன்படி இந்து கோவிலை உடைத்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டத்துக்கு உட்பட்ட வகையில் ஜனநாயக ரீதியில் முகநூலில் கோரிக்கையாக பதிவுசெய்து இருப்பதை வைத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் இந்துக்களுக்காக போராடக் கூடியவர்கள் மீது அடக்குமுறையை செய்வதுபோல் உள்ளது. அதனால் மேற்படி வழக்கை திரும்பப் பெற வேண்டும். இதுபோன்று தமிழகமெங்கும் இந்துக்களுக்காக போராடுபவர்கள் மீது அடக்குமுறை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய்யான வழக்குகளை பதிவு செய்வதை காவல்துறை கைவிட வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தாயகப் பணியில்காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்மாநிலத் தலைவர்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

பொது மக்களின் தற்காப்பு நடவடிக்கைக்கு மத சாயம் பூசுவதா டிஜிபி உத்தரவுக்கு இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மத வெறுப்பு பிரச்சாரத்தால் கலவர அபாயம் உள்ளதாகவும் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கும் எண்ணம் மக்களிடையே உக்கிரம் பெற்று வருகிறது என்றும் தமிழக டிஜிபி அவர்கள் மத சார்பாக ஒருதலைபட்சமாக உத்தரவு பிறப்பித்துள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.

தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியதாக அடிப்படைவாதிகள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாகவும் டிஜிபி அவர்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்

கொரோனா நோய்தொற்று தமிழகத்தில் எப்படி பரவுகிறது என்பது அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் நன்கு தெரியும்.

இந்த நிலையில் பொதுமக்கள் அரசாங்கம் சொல்வது போல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்ந்த பொறுப்பான பதவியில் இருக்கும் டிஜிபி அவர்கள் மதச்சாயம் பூசுவது மிகுந்த வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியதாகும்.

தமிழகத்தில் உள்ள பொதுமக்கள் முஸ்லிம்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் மனோபாவம் பெருகி வருவதாக டிஜிபி அவர்களே கூறியிருப்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றதாகும்.

முஸ்லீம்களிடையே இது ஆத்திரத்தையும், பகைமை உணர்ச்சியையும் தூண்டிவிடும் செயலாகும்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை பார்த்தால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தான் ஹிந்து மத குருமார்களையும், ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும் அவதூறாகவும் , அசிங்கமாவும் பேசுவதோடு கொரானா குறித்து பொய்யான தகவல்களை சமூகத்தில் பரப்பி வருகிறார்கள்.

அவர்கள் மீது பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மாறாக இந்துக்கள் மீது கொடுக்கப்படும் பொய் புகார்கள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

டிஜிபி அவர்களுடைய ஒருதலைபட்ச மத ஆதரவு உத்தரவினை இது வெளிப்படுத்துகிறது.

தப்லீக் ஜமாத் சென்று வந்தவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்ற செய்தியை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே அறிவுறுத்திய பின்பும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக காவல்துறை டிஜிபி அவர்களுடைய உத்தரவு உள்ளது வேதனைக்குரியது.

டிஜிபி அவர்கள் அவர்களுடைய உத்தரவு தான் மதக் கலவரத்திற்கு தூபம் போடுவது போல் அமைந்துள்ளது.

இந்து முன்னணி முன்னாள் மாநிலச் செயலாளர் வேலூர் வெள்ளையப்பன் அவர்கள் படுகொலையின் போது அப்போதைய டிஜிபி திரு. இராமானுஜம் அவர்கள் இது சொந்த பகையில் கொலை நடந்ததாக முஸ்லீம்களை தாஜா செய்யும் நோக்கில் பேட்டி அளித்ததும் பின்னர் விசாரணையில் அந்த படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டதையும் தமிழகம் நன்கறியும்‌.

காவல் உதவி ஆய்வாளர் திரு. வில்சன் அவர்களை படுகொலை செய்து தமிழக காவல்துறைக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைத்தது யார் என்பது டிஜிபி அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

தமிழகத்தில் மதக் கலவரத்தைத் தூண்டக்கூடிய அடிப்படைவாதிகள் யார் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் அதற்கு நேர் எதிர் மாறான ஒரு அறிக்கையை ஹிந்து மக்களை அப்பாவி பொதுமக்களை மிரட்டும் நோக்கில் டிஜிபி அவர்களுடைய உத்தரவு வெளிவந்துள்ளது மிகுந்த வேதனைக்குரியது.

தமிழக முதலமைச்சர் அவர்களும் தமிழக அரசும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து டிஜிபி அவர்களுடைய உத்தரவினை திரும்ப பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது