27.06.2020
வி பி ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்
வியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா ? இந்து முன்னணி கண்டனம்
சாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை உரிய முறையில் நடுநிலையோடு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
அதே சமயம் இரண்டு மனித உயிர்களின் மரணத்தை வைத்து இங்கு பலர் அரசியல் செய்வது மிகுந்த வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.
இரண்டு வியாபாரிகள் மரணத்திற்காக இரண்டு வணிகர் சங்கங்களும் போட்டிபோட்டு கொண்டு கடையடைப்பு ,ஆர்ப்பாட்டம், போராட்டம் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
இவர்கள் சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிகள் தாக்கப்பட்ட போதும், சென்னையில் இதே சமூகத்தைச் சார்ந்த மிகப்பெரிய இந்து துணிக்கடை அதிபர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்ட போதும், ஹலால் உணவு இல்லை என போர்டு வைத்ததற்காக இந்து வியாபாரி கைது செய்யப்பட்டபோதும், நெல்லை மாநகரம் பேட்டையில் வேற்று மதத்தினரால் இந்து வியாபாரிகள் அடித்து விரட்டப்பட்ட போதும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இந்து வியாபாரி காவல்துறையினரால் தாக்கப்பட்ட போதும் எங்கே போனார்கள் ?
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டால் தான் வணிகர் சங்கங்கள் களமிறங்குமா ?
இந்து வியாபாரிகளுக்கு பாதிப்பு , பிரச்சனை , வழக்கு என்றால் பாதுகாப்பு , நீதி கேட்டு இரண்டு வணிகர் சங்கங்களும் போராடாதா?
தென்காசி மாவட்டம் சம்பன்குளத்தில் இதே சமூகத்தைச் சார்ந்த மக்களின் கோவில்கள் இடிக்கப்பட்ட போது எந்த அரசியல் கட்சியும் எந்த சங்கங்களும் வாய் திறக்கவில்லையே ஏன் ?
இன்று மனிதநேயம், ஜீவகாருண்யம், ஈவு இரக்கம், மனிதாபிமானம், மனித உயிர் என்றெல்லாம் வசனம் பேசும் பலர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் காவல்துறை உதவிஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்டபோது ஏன் வாய்மூடி மௌனமாக இருந்தார்கள் ?
குற்றவாளிகள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தால் அனைவரும் வாய் திறக்க மறுப்பது அஞ்சுவது ஏன் ?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட போது அனைவரும் வாய்மூடி வேடிக்கை பார்த்தது ஏன் ?
திருச்சி சிறுவன் சுஜித் வில்சன், சாத்தான்குளம் பெனிக்ஸ் என சிறுபான்மையினர் இறந்தால் மட்டும் உடனடியாக பல லட்சம் ரூபாய் நிதியுதவியும் அவர்களது குடும்பத்தினருக்கு வேலையும் வழங்கும் தமிழக அரசு இந்து குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்தால் பாதிக்கப்பட்டால் நிதி உதவியும் அந்தக் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்க மறுப்பது ஏன் ?
முஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு இறந்த கோவை சசிகுமார் , பாடி சுரேஷ் , ராமலிங்கம் என பல இந்துக்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு பல லட்சம் நிதி உதவி வழங்கியதா ?
அவர்களது குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதா ?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு தற்கொலை செய்து இறந்த தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் மாணவி குடும்பத்திற்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கியதா?
மரணத்தை மதரீதியாக அணுகலாமா என சிலர் வியாக்கியானம் பேசுகிறார்கள் ஒவ்வொருவருடைய மதத்திற்கு ஏற்ப தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் சங்கங்களும் மதரீதியாக பாரபட்சமாக நடவடிக்கை மேற்கொள்ளும் போது மதரீதியாக கேள்வி எழுவது இயல்புதானே
சாத்தாங்குளம் வியாபாரிகள் படுகொலையில் கூட மதரீதியாக சில அதிகாரிகளை காப்பாற்ற முயல்வதாக செய்திகள் வருகிறது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
மாண்புமிகு உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை தானாக முன்வந்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது. அந்த இருவரையும் ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடுநிலையோடு நீதி வழங்கப்படும் என இந்து முன்னணி நம்புகிறது
இரண்டு வியாபாரிகளின் மரணம் கண்டனத்திற்குரியது அதை வைத்து அரசியல் நடத்தும் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வணிகர் சங்கங்களின் செயல் அதைவிட மிகுந்த கண்டனத்திற்குரியது ஆகும். இத்தகைய மதரீதியான பாரபட்சமான போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது
V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்துமுன்னணி