வீரத்துறவி – மத்திய இணையமைச்சர் சந்திப்பு

வீரத்துறவி இராமகோபாலன் அவர்கள் இன்று மத்தியஉள்துறை இணையமைச்சசர் திரு.கிரண்ரிஜிஜூ அவர்களை சந்தித்து தமிழகத்தில் ஜிகாதி பயங்கரவாவாதம் அதிகரித்துள்ளதுபற்றி கூறி அதன் மீது NIA விசாரணைநடத்த வலியுறுத்தினார்.
The founder Organiser of HINDUMUNNANI Sri. Rama. Gopalan ji met the MINISTER OF STATE FOR HOME AFFAIRS  Sri. KIRAN RIJUJU and asked for a probe in JIHADI EXTREMISM(terrorism) in tamilnadu

image

பேச்சாளர் பயிற்சி முகாம் ஏப்ரல் 2 & 3

இந்து முன்னணியின் மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சிமுகாம் திருப்பூரில் நடைபெறுகிறது.
தமிழகத்திலிருந்து ஆர்வமுள்ள புதிய நபர்களை இயக்கத்தின் பேச்சாளர்களாக ஆக்கிடும் முயற்சியாக இந்த முகாம் நடைபெறுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிமுகாமில் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதம் செய்திடவும், பல தலைப்புகளில் பேசிப் பழகிடவும் பயிற்சி அளிக்கப்படும்.
வீரத்துறவி உட்பட பலர் புதிய பேச்சாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கிட வருகின்றனர்.

கோவை கோட்ட செயலாளர்கள் -அறிவிப்பு

கோவை கோட்ட  செயலாளர்களாக திருப்பூர் சேவுகன் அவர்களும் , கோவை குணா அவர்களும்  பொறுப்பேற்றனர்.ஈரோட்டில் நடந்த கோவை  பொதுக்குழுவில்  அமைப்பாளர் திரு.பக்தன் ஜி அறிவித்தார்.

குணா கோவை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளராகவும் , சேவுகன் அவர்கள் திருப்பூர்  பொதுச் செயலாளர் ஆகவும் திறம்பட இயக்கப்பணி ஆற்றி வந்தனர்.

Dr. அரசு ராஜா மாநில பொதுச்செயலாளர் – வீரத்தறவி அறிவித்தார்

இந்துமுன்னணி  கோவை  மண்டல  பொதுக்கழு கூட்டம்  ஈரோட்டில் நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியில்  வீரத்துறவீ  இராம. கோபாலன் அவர்கள் மருத்துவர் திரு.அரசு  ராஜா அவர்கள் மாநிலப்  செயலாளராக பொறுப்பேற்று வழிநடத்துவார் என அறிவித்தார்.

குமரி பகுதியில் இந்துமுன்னனியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு  வருபவர் திரு.அரசு ராஜா அவர்கள்.
dr

 

இந்துமுன்னணி மாநிலத் தலைவராக காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் பொறுப்பேற்றார்

ஈரோடு மாநகரில் கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 14 மாவட்டங்களுக்கான மண்டலப் பொதுக்குழு நடைபெற்றது.

14 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த நகர, ஒன்றிய , மாவட்ட பொறுப்பாளர்கள் சுமார் 684 பேர் கலந்து கொண்டனர்.
நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி திரு. ராம.கோபாலன் அவர்களின் வழிகாட்டுதலில் , மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுச் செயலாளர்கள் திரு. நா.முருகானந்தம் , திரு. சி.சுப்ரமணியம் , மாநிலச் செயலாளர்கள் திரு. கிஷோர்குமார், தாமு வெங்கடேஸ்வரன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு. ராஜேஷ் , திரு.செந்தில்குமார் ஆகிய மாநில  பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் நிறைவுரையாற்றிய வீரத்துறவி இந்துமுன்னணி மாநிலத் தலைவராக திரு.காடேஸ்வரா  சுப்பிரமணியம் அவர்கள் இனி பணியாற்றுவார் என அறிவித்தார்.
பொறுப்பேற்ற திரு.காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள்  , தாணுலிங்க நாடார் ஐயா வகித்த பொறுப்பு இது  அந்த வகையில் இதன் முக்கியத்துவம் உணர்ந்து செயல்படுவேன் எனக் கூறினார்.
cs

சட்டவிரோத சர்ச் – அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணி கோவை மாவட்ட சார்ப்பில்  காளப்பட்டி உள்ள  பழமையான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அருகில் அனுமதி இல்லாமல் நடைபெரும் (Church) சர்ச் தடுத்து நிறுத்தாத காவல் துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ,நாள்:16.3.2016 இடம்:காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில்  #நேரம்:4.00மணிக்கு மாநில பொது செயலாளர் திரு. கடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் 3.000 பேர் காலந்து கொண்டனர்

image

image

image

மிஷன் 2020

தமிழக  இந்து முன்னணி வரலாற்றில்  ஒரு சாதனை நிகழ்ச்சி…
நமது லட்சியம் 20/ 20 ல்  “வீடுதோறும் இந்துமுன்னணி; வீதி தோறும் கிளைக்கமிட்டி”
இந்த  இலக்கை அடைய முதற்கட்ட நிகழ்ச்சி திருப்பூர் மாநகர் மாவட்ட கிழக்கு நகர் பகுதியில் நடைபெற்றது.

திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் ஒரு பகுதியான கிழக்கு நகர் பகுதியின்  7 வார்டுகளை 20 ஆக பிரித்து, அந்த இருபது பகுதிகளில்  (20*20 பேர் ) 400 புதிய  பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்டம் இதுபோல 23 பகுதிகளைக்கொண்டதாக பிரிக்கப்பட்டுள்ளது .
ஒரு நகரில் 400 பேர் என்றால் 23*400=9200 பொறுப்பாளர்கள் …..

இன்றைய செயல் ! நாளைய வரலாறு!!
புதிய சரித்திரம் படைப்போம்.

image

image

தாணுலிங்கநாடார் பிறந்த நாள் -சமுதாய சமர்ப்பண தினம்

பிப்ரவரி மாதம் 17 ம் தேதி  இந்துமுன்னணி முதல் மாநிலதலைவர் ஐயா.தாணுலிங்கநாடார் பிறந்த தினம்.  அதை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் கிளைக்கமிட்டிகள் வாரியாக சமுதாய சமர்ப்பண தினம்  கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு  ஐயா பிறந்த  நூற்றாண்டு விழா நிறைவு விழா நடைபெறவுள்ளதால் , அனைவரும் சமுதாய சமர்ப்பண தினத்தை சிறப்பாக நடத்த வேண்டும். ….
தாணு லிங்க நாடார்
வாழ்கைத் துளிகள்
17-2-1915 அன்று கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி கிராமத்தில் பிறந்தார்.
இளமைப் பருவத்திலேயே இந்து உணர்வு மிக்கவராகத் திகழ்ந்தமையால் 1938 ஆம் ஆண்டு கேரள இந்து மிஷன் உபத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1943 ஆம் ஆண்டு காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய ஐயா அவர்கள் பின்னர் அந்தப் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1944 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டப்படிப்பை முடித்த ஐயா அவர்கள் 1946 ஆம் ஆண்டு நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் சேர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார்.
1946 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார்.
1947 ஆம் ஆண்டு திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.
1948 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்ற உறுப்பினராக தென்தேடுக்கபபட்டு, மூன்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
1951 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்த போது ஒரு பிரிவின் தலைவரானார்.
1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் உபத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
1953 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி ராஜ்யத்தின் சட்டமன்றத்தில் பனம்பள்ளி கோவிந்தமேனன் முதல்வராக இருந்த போது, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக மூன்று ஆண்டுகள் பணி செய்தார். அந்த வேளையில் நாகர்கோவில் நகர் மன்ற உறுப்பினராகவும் செயல்பட்டார்
1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாதம் சிறை தண்டனை பெற்றார்.
1957 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றினார்.
1962 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
1964 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு ஐந்தாண்டு காலம் பணியாற்றினார்.
1971 ஆம் ஆண்டு குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் நிலவிய கிறிஸ்தவ மதவெறி அதிகார போக்கைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதுடன், 14-2-1982 வரை பொது வாழ்விலிருந்தும் விலகி இருந்தார்.
14-3-1982 அன்று மண்டைக்காடு மதகலவரம் தொடர்பாக முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கூட்டிய சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டு இந்துக்களின் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
16-3-1982 அன்று கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணியின் தலைவராக பொறுப்பேற்றார்.
1982 ஆம் ஆண்டு இறுதியில் தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவராக மாநில அமைப்பாளர் வீரத்துறவி இராமகோபாலன் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
13-2-1983 அன்று நாகர்கோவில் நடைபெற்ற இந்து ஒற்றுமை எழுச்சி மாநாட்டிற்கும் ஊர்வலத்திற்கும் அரசு விதித்த தடையை மீறி ஊர்வலம் சென்று கைதாகி பாளையங்கோட்டை சிறையில் 27 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
1984 ஆம் ஆண்டு இந்துக்களின் உரிமை காக்க மண்டைகாடு கடலில் குளிப்பதற்கு ஊர்வலமாக சென்றார்.
1984 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இந்துக்களுக்கு புத்துணர்ச்சி அளித்தார்.
13-7-1987 அன்று கன்னியாகுமரி மாவட்டம் மூஞ்சிறை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் பைபிள் கொடுத்த செயலைக் கண்டித்தும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். மறுநாள் தலைமை ஆசிரியர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டதால் உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
2-10-1987 அன்று நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் நடத்திய விஜயதசமி விழாவில் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றும் பெருமை பெற்றார்.
1988 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெட்கோவார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
3-10-1988 அன்று தூத்துக்குடி  மாவட்டம் ஏரலில் நடந்த டாக்டர் ஜி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் சித்தரகுப்தன் எனது ஏட்டை புரட்டிக் கொண்டிருக்கிறான். எனவே இளைஞர்களே தேசப் பணியாற்ற வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தவாறு மேடையிலேயே காலமானார்.

image

இந்துப் பெண்கள் பாதுகாப்பு மையம் – துவக்கினார் வீரத்துறவி

தமிழகத்தில்  இந்துப் பெண்களை மனம் மாற்றி,  மணம் புரிந்து மதமாற்றம் செய்யும் தீய சக்திகளை  ஒடுக்க  இந்துப் பெண்கள் பாதுகாப்பு மையம் துவக்கப் பட்டுள்ளது.  நமது பெண்கள் காக்கப்பட வேண்டும் , பண்பாடு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும்   பெண்கள்,  பெற்றோர்கள் மத்தியில்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்  என்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

image