7 வது மாநில மாநாடு – கோவை

இந்துமுன்னணி பேரியக்கத்தின் 7வது மாநில மாநாடு கலியுகாப்தம் 5117, மன்மத ஆண்டு, வைகாசி மாதம், 24 ம்தேதி (ஜூன் 7 2015) கோவையில் நடைபெற உள்ளது.

இந்துமுன்னணி பேரியக்கத்தின் முதல் மாநிலத் தலைவர் அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு பிறந்த நாள் 2015 பிப்ரவரி மாதம் 17 ம்நாள் வருகிறது .

எனவே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்துமுன்னணி பேரியக்கம் நடத்தும் மாநில மாநாடு இம்முறை அமரர் திரு.தாணுலிங்க நாடார் அவர்களது நூற்றாண்டு விழா மாநாடாக கொண்டாடிட இந்துமுன்னணி பேரியக்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்கென இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மாநாடு இந்துக்களின் எழுச்சி கீதமாக இருக்கும். அனைவரும் இப்போதிருந்தே தயாராவோம். கோவை மாநகரை காவிக்கோட்டை ஆக்குவோம் பாரத் மாதா கீ ஜெய்

maanaadu

 

 

 

 

 

 

 

 

 

 

 

மண்டலப் பொதுக்குழு -மார்ச் 22 (மத்திய மாவட்டங்கள்)

திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் மத்திய மாவட்டங்குக்கான மண்டலப் பொதுக்குழு  மார்ச் 22 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் நடைபெறும்.

thee  last

மண்டலப் பொதுக்குழு -மார்ச் 15 (மேற்கு மாவட்டங்கள்)

கோவை,திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு பகுதிகளுக்கான மண்டலப் பொதுக்குழு மார்ச் 15 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் நடைபெறும்.

vvivekanandar sticker_2

மண்டலப் பொதுக்குழு – மார்ச் 8 – (தெற்கு மாவட்டங்கள்)

நெல்லை,குமரி உள்ளிட்ட தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களுக்கான மண்டலப்  பொதுக்குழு  மார்ச் 8 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சிவகங்கையில் நடைபெறும்

.siva3.jpg

மண்டல பொதுக்குழு – மார்ச் 1( வடக்கு மாவட்டங்கள் )

சென்னை உட்பட தமிழகத்தின் வாடா பகுதி மாவட்டங்களுக்கான மண்டலப் பொதுக்குழு எதிர்வரும் மார்ச் 1 ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை ) ஆம்பூரில் நடைபெறும்.

AriseAwake_p

பத்திரிகை அறிக்கை

ஐ.ஏ.எஸ். சுந்தரம் அவர்கள் மறைவுக்கு
இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது..

ஐ.ஏ.எஸ். சுந்தரம் அவர்கள் நேற்று இரவு மறைந்துள்ளார். அவர் திறமையான அதிகாரி, நல்ல அறிவாளியாகவும், நல்ல படைப்பாளியாகவும் விளங்கினார். அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றியவர், நல்ல நிர்வாகி.
சாதாரணமாக ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தங்களது மீதி வாழ்நாளை சுகபோகமாக வாழ்ந்து கழிப்பர். அது மட்டுமல்ல, சமுதாயம் எப்படி போனால் என்ன, ஏதோ மரியாதையாக இருந்துவிட்டோம், இனியும் அப்படியே காலத்தை ஓட்டலாம் என நினைப்பார்கள்.
ஆனால், சுந்தரம் அவர்கள், பதவியில் இருக்கும்போதும், பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஒரு அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த காட்டியவர்.
தனது திறமை, ஆற்றல், நேரம் எல்லாவற்றையும் நாட்டுக்காக அர்ப்பணித்தவர்.
இந்துக்களுக்களின் உரிமைக்காக போராடும் குணம் கொண்டவர். பத்திரிகையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
இப்படி எல்லா நற்குணங்களும் கொண்ட தேச பக்தரை நாடு இழந்துள்ளது, இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அன்னாரது ஆன்மா நற்கதி அடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது.
அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)
இச்செய்தியினை தங்கள் பத்திரிகையின் அனைத்துப் பதிப்புகளிலும் வெளியிட வேண்டுகிறோம்.

இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம்

வணக்கம்.
வீரத்துறவி ஐயா இராம கோபாலன் அவர்களின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு
ஸ்டேட் இந்து முன்னணி டிரஸ்ட் மற்றும் சக்தி மருத்துவமனை ஆராய்ச்சி நிலையம்
இணைந்து
மாபெரும் இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் மற்றும் இரத்த தான முகாம் கீழ்க்கண்டவாறு நடைபெற இருக்கிறது.
நாள்: 2.11.2014 காலை 9 மணி முதல் 12 மணி முடிய.
இடம்: சுஸ்வானி மாதா ஜெயின் பள்ளி, குட்டி தம்பிரான் தெரு, புளியந்தோப்பு, சென்னை-12.

invitation

பசுத்தாய் சந்தா சேகரிப்பீர்

இந்துமுன்னணி பேரியக்கத்தின் வெளியீடான ஆன்மீக,தேசிய மாத இதழ் பசுத்தாய்.

மாதத்திற்கு  ஒன்று என வருடத்திற்கு 12 புத்தகங்கள்  இல்லத்திற்கே வரும்.

நமது வெளியீட்டினை மக்களிடத்திலே கொண்டு செலுத்த ஒரு மாபெரும் வாய்ப்பு .

எதிர் வரும் நவம்பர் 1 ம் தேதி முதல் 15 தேதி வரை பசுத்தாய் சந்தா சேர்த்திட  சிறப்பு  கவனம் கொடுக்க வேண்டிய நாளாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் இதற்காக விசேஷ முயற்சி எடுத்து நமது ஆதரவாளர்கள், தொடர்பில் உள்ளவர்கள் என அனைவரையும் பசுத்தாய் இதழிற்காக சாந்த செலுத்த கோர வேண்டும்.

குறிப்பு: ஆண்டு சந்தா ரூ.100/-

சந்தா அனுப்பவேண்டிய முகவரி:

பசுத்தாய் ஆன்மீக , தேசிய மாத இதழ்

58, அய்யா முதலித் தெரு.,

சிந்தாதரிப்பேட்டை

சென்னை 600 002

மழை நிவாரணப் பணிகளில் இந்துமுன்னணி

தமிழகம் முழுதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. திருப்பூரில் பெய்த மிக பலத்த மழையின் காரணமாக மக்கள் வசிக்கும் பல குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.

குறிப்பாக நொய்யல் கரைப்பகுதி ஓரமாக வசிக்கக்கூடிய பகுதிகளில் நிவாரணப்பணிகளில் இந்துமுன்னணி ஊழியர்கள் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள்.  மேலும் உணவு விநியோகமும் நடைபெற்றது.

IMG-20141028-WA0046[1]IMG-20141028-WA0029[1]IMG-20141028-WA0028[1]IMG-20141028-WA0022[1]IMG-20141028-WA0016[1]IMG-20141027-WA0129[1]IMG-20141027-WA0035[1]