இஸ்லாமிய மதமாற்ற அபாயம்!  தீர்வு காண இந்துமுன்னணி களமிறங்கியது. …

நாகை மாவட்டம் வேதாரண்யம், கள்ளிமேடு  பத்ரகாளியம்மன் கோவில் பிரச்சைனையை முன்வைத்து அந்த பகுதியை சேர்ந்த 150 தலித்குடும்பங்கள் முஸ்லீம்களாக  மதம்மாறபோவதாக அறிவித்த செய்தியை அறிந்து இன்று 27/07/16 இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் திரு.பக்தன் ஜி சம்பந்தபட்ட மக்களை நேரில் சந்தித்து வருகிறார்கள்.

நாகைமாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள, கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள அம்மனை பல ஆண்டுகளாக   அனைத்து சமுதாய மக்களும்  தங்குதடையின்றி வழிபட்டு  வருகின்றனர். 

இந்தநிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக, திருவிழா மண்டகபடி சம்பந்தமாக  இந்து அறநிலையதுறையுடன் அப்பகுதி மக்களுக்கு பிரச்சனை இருந்து வருகிறது. 

பழங்கள்ளிமேடு மக்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க இந்து அறநிலையதுறை அலட்சியம் காட்டி வந்த காரணத்தல் அந்த மக்கள் நீதி மன்றத்தை நாடியுள்ளனர். அதன்  பிறகும் கூட மாவட்ட நிர்வாகம்  அலட்சிய போக்குடன் நடந்துகொண்ட காரணத்தால், ஆண்டு தோறும் நடைபெறும்  கோவில் திருவிழாவின்போது தேவையற்ற பதட்டம் நிலவிவருகிறது.

மேற்கண்ட கோவிலை கையில் வைத்திருக்கும் அரசும் மாவட்ட நிர்வாகமும் திடமான முடிவு எதையும் எடுக்காமால் பிரச்சனையை ஒத்திவைத்து கொண்டு வருவதால், மேற்கண்ட பிரச்சனை தீண்டாமை பிரச்சனைபோல் உருவெடுத்து மதமாற்ற சக்திகள் கிராமத்தில் ஊடுருவ வழிவகுத்திருக்கிறது. 

இந்தநிலையில் இந்துமுன்னணி மாநில அமைப்பாளர். க.பக்தவசலம் தலைமையில் மாநில செயலாளர் அ.வா.சனில்குமார்,

மாவட்ட தலைவர். k.s.விஜயன் ஆகியோர்கொண்ட குழுவினர் பழங்கள்ளிமேடு மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து உண்மை நிலவரத்தை கேட்டறிந்தபோது “ஆலய நிர்வாக அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர்களே” இப்பிரச்சனை மோசமான நிலைக்கு செல்ல காரணம் என்று தெரியவருகிறது.

இந்துசமுதாயத்தினரிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதில் ஆதாயம் பெற சில பிரிவினைவாத சக்திகள் வேலை செய்துவருவதை பழங்கள்ளிமேடு இந்துக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

மேலும் காவல் துறையும் தன் பங்கிற்க்கு இந்த விவகாரத்தை தவறானமுறையில் கையாண்டு அரசின் குளறுபடிகளை மூடிமறைக்க வேலை செய்துவருகிறது.  மாவட்ட நிர்வாகத்திற்க்கு பாடம் புகட்டுவதற்க்காகதான் பழங்கள்ளிமேடு கிராமத்தினர் மதம் மாறபோகிறோம் என்று அறிவித்துள்ளனர்.

காவால்துறையினர் இதை அறிந்திருந்தும்,” முஸ்லிம் அமைபினர்கள் குரானை திணிப்பதற்கு” அனுமதியளித்து மதமாற்ற சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.

கள்ளிமேட்டு பத்ரகாளியம்மனை ஆண்டுதோறும்  லட்சகணக்கான பொதுமக்கள்வழிபட்டு  வருகிறார்கள். ஆடிமாத கோவில் திருவிழாவான இந்தசமயத்தில் கோவிலை பற்றி சர்ச்சை எழுவதால் பொதுமக்களிடையே அச்சம் நிலவிவருகிறது,

எனவே கோவிலை கையில்வைத்துள்ள அரசு நிர்வாகம்  இதில் தலையிட்டு இந்தபிரச்சனைக்கு உடனயாக தீர்வுகாண வேண்டுமென இந்துமுன்னணி கேட்டுகொள்கிறது.

     

க.பக்தவத்சலம்

மாநில  அமைப்பாளர் 

இந்துமுன்னணி

இந்து அன்னையர் முன்னணி மாநில பயிற்சி முகாம்

தமிழகத்தில்  ஆன்மீகத்தின் மூலம் இந்துக்களிடையே ஒற்றுமை ஏற்படுத்திட  அன்னையர் முன்னணி செயல்பட்டு வருகிறது.
பெண்கள் பங்கேற்கும் மாநில அளவிலான பண்பு பயிற்சி முகாம் திருப்பூரில் நடைபெற்றது.  48 பெண்கள் கலந்து கொண்டனர்.

image

image

மாணவர்கள் முகாம்

விடுமுறை காலத்தில் மமாணவர்களுக்கு  நமது பண்பாடு, கலாச்சாரம், தேச தலைவர்கள் வரலாறு,  ஆன்மீக பெரியவர்கள் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுடன்  உடற்பயிற்சி வகுப்புகள்,  விளையாட்டுகள் கற்றுத் தரப்பட்டன.
திருப்பூரில் 119 மாணவர்கள்,  திருச்சியில் 174 மாணவர்கள்,  குமரியில் 137 மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்

image

image

image

மாநில பண்பு பயிற்சி முகாம்

தமிழகத்தில் அமைப்பு வேலைகளை அதிகரிக்கும் விதமாக  ஊழியர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் 3 இடங்களில் நடைபெற்றது.
திருப்பூரில் 178 பேர்களும்,  வேலூரில் 120 பேரும் , சுரண்டையில் 171 பேர்களும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

image

image

image

உள்துறை அமைச்சரை சந்தித்தார் வீரத்துறவி

தமிழகத்தில் தலைவிரித்தாடும் ஜிகாதி பயங்கரவாதத்தைத் தடுக்க NIA விசாரணை – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி.

ஹிந்து முன்னணி நிறுவனர் வீரத்துறவி திரு இராம கோபாலன் அவர்கள் 14-4-2016 அன்று காலை 11 மணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்  அவர்களை, புது தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.

தமிழக ஜிஹாதி படுகொலைகள், தாக்குதல்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத சம்பவங்கள் குறித்த, ஆங்கில ஆவணப்படத்தை திரு இராம கோபாலன் அவர்கள் அமைச்சரிடம் அளித்தார். இந்த ஆவணப் படங்கள் கடந்த பிப்ரவரி 21 அன்று தமிழில் வெளியிடப்பட்டது.

ஆவணங்களின் அடிப்படையில் தமிழகத்தின் ஜிகாதி சம்பவங்கள் மீது NIA விசாரணை நடத்த வேண்டும் என்று இந்த சந்திப்பின்போது திரு இராம கோபாலன் அவர்கள் அமைச்சரிடம் வலியுறுத்தினார். இந்த ஆவணங்களின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள்  உறுதியளித்தார்.

image

வீரத்துறவி – மத்திய இணையமைச்சர் சந்திப்பு

வீரத்துறவி இராமகோபாலன் அவர்கள் இன்று மத்தியஉள்துறை இணையமைச்சசர் திரு.கிரண்ரிஜிஜூ அவர்களை சந்தித்து தமிழகத்தில் ஜிகாதி பயங்கரவாவாதம் அதிகரித்துள்ளதுபற்றி கூறி அதன் மீது NIA விசாரணைநடத்த வலியுறுத்தினார்.
The founder Organiser of HINDUMUNNANI Sri. Rama. Gopalan ji met the MINISTER OF STATE FOR HOME AFFAIRS  Sri. KIRAN RIJUJU and asked for a probe in JIHADI EXTREMISM(terrorism) in tamilnadu

image

பேச்சாளர் பயிற்சி முகாம் ஏப்ரல் 2 & 3

இந்து முன்னணியின் மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சிமுகாம் திருப்பூரில் நடைபெறுகிறது.
தமிழகத்திலிருந்து ஆர்வமுள்ள புதிய நபர்களை இயக்கத்தின் பேச்சாளர்களாக ஆக்கிடும் முயற்சியாக இந்த முகாம் நடைபெறுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிமுகாமில் பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றி விவாதம் செய்திடவும், பல தலைப்புகளில் பேசிப் பழகிடவும் பயிற்சி அளிக்கப்படும்.
வீரத்துறவி உட்பட பலர் புதிய பேச்சாளர்களுக்கான பயிற்சிகள் வழங்கிட வருகின்றனர்.

கோவை கோட்ட செயலாளர்கள் -அறிவிப்பு

கோவை கோட்ட  செயலாளர்களாக திருப்பூர் சேவுகன் அவர்களும் , கோவை குணா அவர்களும்  பொறுப்பேற்றனர்.ஈரோட்டில் நடந்த கோவை  பொதுக்குழுவில்  அமைப்பாளர் திரு.பக்தன் ஜி அறிவித்தார்.

குணா கோவை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளராகவும் , சேவுகன் அவர்கள் திருப்பூர்  பொதுச் செயலாளர் ஆகவும் திறம்பட இயக்கப்பணி ஆற்றி வந்தனர்.

Dr. அரசு ராஜா மாநில பொதுச்செயலாளர் – வீரத்தறவி அறிவித்தார்

இந்துமுன்னணி  கோவை  மண்டல  பொதுக்கழு கூட்டம்  ஈரோட்டில் நடைபெற்றது.

நிறைவு நிகழ்ச்சியில்  வீரத்துறவீ  இராம. கோபாலன் அவர்கள் மருத்துவர் திரு.அரசு  ராஜா அவர்கள் மாநிலப்  செயலாளராக பொறுப்பேற்று வழிநடத்துவார் என அறிவித்தார்.

குமரி பகுதியில் இந்துமுன்னனியின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டு  வருபவர் திரு.அரசு ராஜா அவர்கள்.
dr