இராம.கோபாலன் ஜி 88வது பிறந்தநாள்

இந்துமுன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி ஐயா இராம.கோபாலன் ஜி

88வது பிறந்தநாள் முன்னிட்டு

நெல்லை மேற்கு மாவட்ட இந்துமுன்னணி சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில்

சுரன்டை பேருந்து நிலையம் முன்பு செல்வவிநாயகர் திருக்கோவில் சிறப்பு பூஜை நடைபெற்று ஆயிரகணக்கான பொது மக்களுக்கு சர்க்கரை பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது

IMG-20141016-WA0012

கோபால் ஜி பிறந்த நாள் நிகழ்ச்சி

இந்து முன்னணி நிறுவன தலைவர் இராம.கோபாலன் ஜி அவர்களுடைய பிறந்த நாளை முன்னிட்டு குருகுலத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் பிரார்த்தனைIMAG0625

வீரத்துறவி பிறந்தநாள் – அகவை 88

இன்று இந்துமுன்னணி பேரியக்கத்தினுடைய  நிறுவனத் தலைவர் , அனைவராலும் கோபால் ஜி என்று அன்புடன் அழைக்கப்படுகின்ற வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களுடைய 88 வது பிறந்தநாள் . வாழ்க்கை முழுவதையும் ஹிந்து தர்மத்திற்காகவும், பாரத நாட்டிற்காகவும் அர்ப்பணித்த ஒப்பற்ற மனிதர்.

அவருடைய பிறந்த நாளிலே இந்துமுன்னணி பொறுப்பாளர்கள், ஊழியர்கள், தொண்டர்கள் அனைவரும் அவரை மனத்தால் நினைத்துக்கொண்டு இந்து சமுதாயப்பணியில் தீவிரமாக ஈடுபட சபதமேற்போம்

img00.jpg img03.jpgimg02.jpgகோபால்ஜி

ஒன்றிய பயிற்சிமுகாம்

திருப்பூர் கிழக்கு மாவட்டம் – குண்டடம் ஒன்றியம் –  விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் மூலம் தொடர்புக்கு வந்துள்ள புதிய நபர்களுக்கான 3 மணி நேர கார்யகர்த்தர் பயிற்சிமுகாம் முத்துகவுண்டன்பாளையம் பகுதியில் நடைபெற்றது. 69 பேர் கலந்துகொண்ட இப்பயிற்சி முகாமிற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.பெரியசாமி., திரு.தமிழ்செல்வன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. ராஜேஷ் அவர்கள் வழிநடத்தினார்.IMAG0611[1] IMAG0616[1]

ராஜகோபால் ஜி- புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி-கோவை

இந்து முனனணியின் முன்னாள் மாநில தலைவர் .அமரர் வழக்கறிஞர் “ராஜகோபால் “ஜி அவர்களின் 20 ம் ஆண்டு நினைவுநாள் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி, கோவை காந்திபார்க் சலீவன் வீதியில் மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றதுamararamarar1

ராஜகோபால் ஜி நினைவு அஞ்சலி- மதுரை

அமரர் திரு .ராஜகோபால் ஜி நினைவாக , அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்துமுன்னணி பேரியக்கம் மற்றும்  சரவணா மருத்துவமனை & சூர்யா தொண்டு நிறுவனம் இணைந்து இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தியது.

இந்த நிகழ்ச்சயில் மாநில இணை அமைப்பாளர் திரு. பொன்னையா , மாநில செயலாளர்கள் திரு.சுடலைமணி ., திரு.முத்துகுமார் மற்றும் மாவட்ட தலைவர் திரு.பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.IMG_9944IMG_9960

ஸ்ரீ விநாயகர் அகவல் ஒப்புவித்தல் போட்டி

தூத்துக்குடி மாவட்ட இந்துமுன்னணி சார்பில் 10.10.14 அன்று பள்ளி மாணவர்களுக்கான ஸ்ரீ விநாயகர் அகவல் ஒப்புவித்தல் போட்டி உடன்குடி- தேரியூர் ஸ்ரீ ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் பள்ளியில் நடைபெற்றது.

இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் திரு. V.P. ஜெயகுமார் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் திரு.பொன்.பரமேஸ்வரன் ., திரு. சுடலைமுத்து.,நகர பொறுப்பாளர் திரு.சித்திரை பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் திரு. நல்லசிவன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி திரு. ஜோதிமணி அவர்கள் மாணவர்களுக்கு  பரிசுகளை வழங்கினார் .

சுமார் 80 மாணவர்களுக்கு தரமான புத்தகப் பைகள்  வழங்கப்பட்டது.vpj(1)

ஓசூர் ஆர்பாட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் (9.10.14) நடைபெற்ற து . மாநில இணை அமைப்பாளர் திரு. K.K . பொன்னையா மற்றும் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.20141009_163805-1

10.10.2014 -அமரர் ராஜகோபால் ஜி நினைவுதினம்

இந்துமுன்னணி பேரியக்கத்தின் இரண்டாவது தலைவராக இருந்து மிகச் சிறந்த வகையிலே இயக்கப்பணி ஆற்றி தேசப்பணிக்காகவே இன்னுயிர் ஈந்தவர் அமரர்.திரு.ராஜகோபால் ஜி.

வழக்கறிஞர் , சிறந்த சிந்தனையாளர், பேச்சாற்றல் மிக்கவர், அனைவரிடத்திலும் அன்புடன் பழகக் கூடியவர் , எளிமையனாவர் எனப் பன்முக திறன் கொண்டவராகத் திகழ்ந்தவர் .

தமிழகத்தின் கீழக்கரை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட முடியாத வகையிலே இஸ்லாமிய எதிர்ப்பு இருந்துவந்தது. அங்கு எப்படியும் விநாயகர் திருமேனிகளை பிரதிஷ்டை செய்து விழாவினைக் கொண்டாடியே தீரவேண்டும் என முடிவு செய்தபோது, அங்கு தானே செல்வதாகக் கூறி, களப்பணி ஆற்றி, இந்துக்களை ஒன்றிணைத்து மிக தீரத்துடன், சாதுரியத்துடன் விநாயகர் சதுர்திவிழா கொண்டாட வைத்தவர்.

பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் விசர்ஜன விழாவிலே கலந்துகொண்டதைப் பொறுக்காத இஸ்லாமிய விஷமிகள் காங்கிரீட் ஆணிப் பந்துகள் செய்து அவர்மீது வீசி தாக்கியதில் அவருக்கு மண்டை உடைந்தது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாது இயக்கப்பணி ஆற்றியவர்.

மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக பக்தர்களுக்கு பெரும் தொந்தரவு இருந்துவந்தது. அதில் பெரும்பாலான வியாபாரிகள் முஸ்லிம், கிறிஸ்தவர்களாக இருந்தனர்.  ” கோவிலானது மக்கள் வழிபடும் இடம் ; அதை வியாபார ஸ்தலமாக ஆக்கிவிடக்கூடாது”  என்பதற்காக தொடர் போராட்டங்கள்  நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றிட வழிவகை செய்தார்.

திருப்பரங்குன்ற மலையின் மீது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த கார்த்திகை  தீபத் திருவிழாவினை, இஸ்லாமியர்களின் போக்குவரத்து இருக்கிறது என்பதற்காகவும் அங்கு அவர்களுடைய ஒரு கட்டிடம் இருக்கிறது என்பதாலும் நடத்த விடாது அரசும்,இந்து அறநிலையத்துறையும்,காவல்துறையும்   தடுத்து வந்தது. இதை எதிர்த்து கார்த்திகை தீப போராட்டங்கள்,  பதயாதிரைகள் நடத்தி அதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இவருடைய இந்த அரும்பணிகளைப் பொறுக்காத இஸ்லாமிய விஷமிகள் அவரை அவரது வீட்டின் முன்பாகவே 10.10.1994 அன்று படுகொலை செய்தனர்.

தேசப்பணியே தெய்வப்பணியாக செய்து வாழ்ந்த மாபெரும் வலிகாதஈ அவர்.

அவர் நமது மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது ஆசிகளால் நாம் சிறப்பாக இயக்கப் பணிகளை செய்திடுவோம்.

அன்னாரது 20 வது ஆண்டு நினைவு நாளில் அவரது பெயரால் ரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை  முகாம்கள், மரக்கன்றுகள் நாடும் விழாக்கள் உள்ளிட்ட சேவைப்பணிகள் ஆற்றிடுவோம் .

 

வந்தேமாதரம் ! பாரத் மாதா கீ  ஜெய்!!

DAL3FdPdYLEVbBXtH0BQbF0Y

ஒன்றிய பயிற்சி முகாம்கள்

தற்போது நடந்து முடிந்த பொதுக்குழுவில் ஆலோசித்தபடி நாம் உடனடியாக செய்ய வேண்டியது, ஒன்றிய அளவிலான ஒரு நாள் பயிற்சிமுகாம்கள் . தமிழகம் முழுதும் நடந்துமுடிந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் எண்ணற்ற புதிய இளைஞர்கள் இந்து முன்னணியில் இணைந்து பணியாற்றிட முன்வந்துள்ளனர். புதிய பல தொடர்புகள் நமக்கு வந்துள்ளது. இவர்களுக்கு தகுந்த பயிற்சிகள் கொடுத்து  சிறப்பான வகையிலே இயக்கப்பணி ஆற்றிட வகை செய்யும் வகையில் ஒரு நாள் பயிற்சிமுகாம்கள் திட்டமிட்ட வகையிலே மாநிலம் முழுதும் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும்  நடத்தப்பட உள்ளன.

பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.logo