​இராம கோபாலன் பத்திரிக்கை அறிக்கை – மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவமதிப்புக்கு கண்டனம்

இராம கோபாலன்

நிறுவன அமைப்பாளர்

இந்து முன்னணி, தமிழ்நாடு
17-3-2017
பத்திரிகை அறிக்கை
தமிழ்நாட்டில் பரவி வரும் நக்ஸல் பயங்கரவாதத்தின் வெளிப்பாடு தான் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவமதிப்பு..

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் படித்த சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். முத்துக்கிருஷ்ணனை இழந்த துக்கத்தில் இருந்த அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, வேண்டிய உதவிகளை செய்து, பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊருக்கு வரும் வரை உடனிருந்து உதவியவர் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள்.

துக்க வீட்டில் கூட அரசியல் செய்வது அநாகரிகமான செயல். அதனைவிட துக்கம் விசாரித்து அஞ்சலி செலுத்த மத்திய அமைச்சர் மீது நக்ஸல் பயங்கரவாதி சாலமன் என்பவன் செருப்பை வீசியிருக்கிறான். இடதுசாரி பயங்கரவாத அமைப்புகள், விடுதலை சிறுத்தை போன்ற அமைப்பினர் மத்திய அமைச்சருக்கு எதிராக கோஷங்கள் போட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தமிழகத்திற்குத் தலைகுனிவை ஏற்படுத்துகின்றன.

மத்திய அரசுக்கு எதிராக மக்களை திசைத் திருப்ப திருவள்ளூரைச் சேர்ந்த சாலமன், சேலம் சென்று இந்த கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளான். அவன், இந்திய மக்கள் முன்னணி என்ற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்ற நக்ஸல் அமைப்பின் உறுப்பினன்.  திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்ற இந்துவிற்கு பிறந்த மதமாறிப் போனவன் தான் இந்த சாலமன்.

முத்துகிருஷ்ணனின் மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம். அதே சமயத்தில் நக்ஸல் இயக்கங்கள், விடுதலை சிறுத்தைகள் போன்றவை இதனை அரசியலாக்க ஏன் துடிக்கின்றன?

இதே நக்ஸல் அமைப்புதான் விழுப்புரத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். படையில் வேலை பார்த்த சங்கரை கொன்றது. இடதுசாரி பயங்கரவாத அமைப்பான நக்ஸல் இயக்கத்தினர் தமிழனை கொன்றதை எந்த கட்சியும் கண்டிக்கவில்லை?!

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியில் ஆளும் கட்சியின் ஒரே எம்.பி.யான இவர் மத்திய அமைச்சராகி, தமிழகத்தின் நலனில் கவனம் செலுத்தி பல சாதனை படைத்து வருகிறார். 

இதனை எல்லாம் மறந்து, அநாகரிக செயலை அரங்கேற்றியிருக்கின்றனர் பிரிவினைவாதிகள். இடதுசாரி பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட விஷயம் கிடைக்காதா என அலைகிறார்கள். 

பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொண்ட இடதுசாரி பயங்கரவாதியின் செயலை அனைத்துக் கட்சிகளும் கண்டிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இடதுசாரி பயங்கரவாதம் தமிழகத்தில் தலைதூக்கி வருகிறது என்று இந்து முன்னணி மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கிறது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து இடதுசாரி பயங்கரவாத்தை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *