தயார் நிலையில் விநாயகர் திரு உருவச் சிலைகள்

வரும் 29 ம் தேதி நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் இந்துமுன்னணி பேரியக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சதுர்த்தி விழாவினை மக்கள் எழுச்சி விழாவாக கொண்டாடி வருகிறது.

இந்துக்கள் ஜாதி,இன, மொழி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும். ஒன்றுபட்ட சக்தி உலகையே வெல்லும் என்ற செய்தியோடும் …, மக்களை மதமாற்றம் செய்யும் தீய சக்திகளை வேரறுக்க வேண்டும் எனவும். மதம் மாறுவது அவமானம்.., தாய் மதம் திரும்புவது தன்மானம் என்ற கோஷத்தை முன்னிறுத்தியும் இந்து முன்னணி இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னெடுத்துச் செல்கிறது.

சதுர்த்தி விழாவினை சிற்பக கொண்டாடும் வகையினில் தமிழகம் முழுதும் பல இடங்களில் விநாயகர் திரு மேனிகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சுமார் 50000 விநாயகர் திரு உருவச் சிலைகள் தயாராய் உள்ளது.

3.5  அடி முதல் 11  அடி சிலைகள் வரை, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் காகிதக்கூழில் செய்யப்பட்டுள்ளது.

புதிய வடிவில், வண்ணத்தில் இந்த திருவுருவங்கள் கண்ணையும், மனத்தையும் கவருகின்றன

SAM_5946 SAM_5951 SAM_5934 SAM_5937 SAM_5942 SAM_5945 SAM_5953