Daily Archives: July 13, 2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது! மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

13.07.2020

பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவுபடுத்தி பிரச்சாரம் – சாது மிரண்டால் காடு கொள்ளாது – கடும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் இந்துமுன்னணி போரட்டக் களத்தில் இறங்கும்
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை

நீண்டகாலமாகவே பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் மறுப்பு என்ற பெயரில் இந்து மதத்தை மட்டுமே குறிவைத்து விஷமப் பிரச்சாரம் செய்வது தொடர்கதையாக இருந்து வருகிறது.

கடவுள் மறுப்பாளர்கள் பகுத்தறிவு என்று கூறிக்கொண்டு இவர்கள் குறிப்பாக இந்து மதத்தினை, இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி இந்துக்களின் மனம் புண்படும் விதத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடுவது, அறிக்கைகள் விடுவது என்று தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களை இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கருப்பர் கூட்டம் என்ற சமூக வலைத்தள யூ ட்யூப் பதிவு ஒன்றில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த நபரொருவர் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசம் தனை இழிவுபடுத்தி, இந்துக்களின் மனம் புண்படும்படியாக கருத்துக்களை பரப்பியுள்ளார்.
இத்தகைய செயலானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்த நபர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிமிடம் வரை இந்த நபர் மீது காவல்துறையோ, அரசாங்கமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே ஹிந்துக்கள் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொன்னால் யாரும் புகார் கொடுக்க விட்டாலும் கூட காவல்துறையே முனைந்து வெகு விரைவாக போர்க்கால அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றது. ஆனால் ஹிந்து மதத்தை வேறு ஒரு மதத்தைச் சார்ந்த நபர் தாறுமாறாக மனம் புண்படும்படியாக விமர்சித்தால் கூட புகார் கொடுத்த பின்னும் காவல்துறையும், அரசாங்கமும் மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது. ஒருவேளை ஹிந்துக்கள் எந்த பின்விளைவும் ஏற்படுத்த மாட்டார்கள் என்கின்ற ஒரு முடிவில் அரசாங்கமும் , காவல் துறையும் இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்கின்ற பொழுது சட்ட விரோதமாக செயல்படும் ஒரு இஸ்லாமியர் மீதோ அல்லது ஒரு கிறிஸ்தவர் மீதோ அல்லது இந்துக் கடவுளை, இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மீதோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்க ஏன் பயப்படுகிறது? காவல்துறை ஏன் பின்வாங்குகிறது?
ஒருவேளை குண்டு வைக்கின்ற பயங்கரவாதிகளை போல் இல்லாமல் ஹிந்துக்கள் அமைதியாக இருப்பார்கள் என்கின்ற ஒரு நோக்கத்தில் அல்லது ஹிந்துக்கள் எதிர்த்துப் போராட மாட்டார்கள் அமைதியாக இருப்பார்கள் என்ற கருத்தினால் காவல்துறை அமைதியாக இருக்கின்றதா? அல்லது காவல்துறை ஹிந்துமத விரோதிகளின் கைகளில் சிக்குண்டு கிடக்கின்றதா? அரசாங்க எந்திரம் கிறிஸ்தவ மிஷனரிகள், திக, திமுக, இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாத அமைப்புகளுடைய பிடியில் சிக்கிக்கொண்டு உள்ளதா? என்ன காரணம்?

இவ்வளவு பேர் பலி கொடுத்தும், இத்தனை பிரச்சினைகள் இருந்தும் கூட அரசாங்கம் இன்னும் மெத்தனமாக கண் மூடித் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இவர்களுக்கு இந்துக்கள் கிள்ளுக்கீரையாக இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை அரசாங்கமும் காவல் துறையும் நினைவில்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பதிவுகளை இட்ட அந்த நபர் மீதும் அதற்கு பின்னணியில் இயங்கும் இஸ்லாமிய நபர் மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை என்றால், கைது செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்கா விட்டால் இந்து முன்னணி இந்த விஷயத்தில் நேரடியாக களம் காண வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆகவே அரசாங்கமும் காவல் துறையும் சற்றும் தாமதிக்காமல் புண்பட்டு இருக்கக்கூடிய இந்துக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் தற்போது எடுக்கக்கூடிய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்து மத நம்பிக்கைகளை, இந்துமத பண்பாடு கலாச்சாரங்கள் இந்து கடவுள்களை யாரும் எளிதில் விமர்சனம் செய்யவும் முடியாது என்கின்ற பயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

தாயகப் பணியில்

காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்