Daily Archives: June 12, 2020

பாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை- இந்துமுன்னணி மாநிலத் தலைவர்

12.06.2020
பாரம்பரியப் பெருமை மிக்க ஊர்களின் பழைய பெயரை மீண்டும் சூட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை.
இந்துமுன்னணி மாநிலத் தலைவர் அறிக்கை.

பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் சில ஊர்களின் பெயர்கள், அவர்களுக்கு வாயில் உச்சரிக்க வராததால், அவர்களுக்கு ஏற்ப பெயர் கொடுத்தனர்.

நீண்ட பாரம்பரியம் மிக்க ஊர்களின் பெயர் கூட மருவி ஆங்கிலேயர் உச்சரிப்புகளில் வழங்கி வந்தன. அதாவது தஞ்சாவூர் என்பது TANJORE என்று அழைக்கப்பட்டது.

தற்போது தமிழக அரசு தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மீண்டும் ஊர்களின் பெயர்களை மாற்றியமைத்துள்ளது.

இந்துமுன்னணி பேரியக்கம் தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

அதே சமயம் மிக நீண்ட பாரம்பரியம் மிக்க பல ஊர்கள் காலப்போக்கில் பெயரே மாற்றம் செய்யப்பட்டு வழங்கி வருகிறது.

இந்த மாதிரி பெயரே மாற்றப்பட்ட ஊர்களின் பாரம்பரியப் பெயரை மீண்டும் வைப்பது நமது பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியாகும் .

உதாரணத்திற்கு தற்போது புனித தோமையார் மலை என்பது பிருங்கி முனிவர் வசித்த பகுதியாகும். எனவே அதற்கு பிருங்கி மலை என்று வைப்பது நமது பண்பாட்டை மீட்டுகும் பணி.

ஆகவே தமிழக அரசு இத்தகைய பெயர் மாறிய ஊர்களின் பெயர்களையும் திரும்ப வைக்கவேண்டும் என இந்துமுன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.

வணக்கம்

தாயகப் பணியில்

காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்.

கோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி- மத்திய உள்துறைக்கு கடிதம்- மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்

தேதி: 11.06.2020பெறுநர்:மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள்பொருள் : உரிய விசாரணை நடத்தாமல் கோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி- மனு வணக்கம். தென்காசி மாவட்டம் சம்பங்குளத்தில் சுமார் 160 இந்து சமுதாய குடும்பங்கள் இருந்து வருகின்றனர் .சம்பங்குளத்தில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் . இந்து சமுதாய மக்கள் விவசாயிகள் இருந்து வருகிறார்கள் .மேற்கண்ட சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காட்டுப்பச்சாத்தி மாடசாமி கோவில் சொத்தானது தற்போது தென்காசி தாலுகா சிவசைலம் கிராமம் பட்டா எண் 1598 மற்றும் பட்டா எண் 1376 உள்ளது . அதை காலம் காலமாக இந்து சமுதாய மக்கள் குலதெய்வ கோவிலாக வணங்கி வழிபாடு செய்து வருகின்றனர் .அந்தக் கோவிலில் பச்சாத்தி மாடன் மண்பீடம் இருந்து வருகிறது . வருடாவருடம் அதை புதுப்பித்து சித்திரை மாதம் கோவில் கொடை நடத்தி வருகின்றனர் . இந்த வருடமும் சித்திரை மாத கொடை விழாவிற்காக மண் பீடம் அமைந்திருந்தனர் .கொரோனா பிரச்சினை காரணமாக இந்த வருடம் கோவில் கொடை விழா நடத்தப்படவில்லை . மேற்படி மண்பீடம் மழையில் கரைந்து போவதால் வருடாவருடம் பீடம் செய்வதை தவிர்ப்பதற்காக தற்காலிக சிமெண்ட் சீட் போட ஊர் மக்கள் தீர்மானித்தனர் ,ஆனால் சம்பங்குளத்தில் இருக்கும் முஸ்லிம் மத தீவிர ஈடுபாடு உடையவர்கள் இந்து கோவிலில் இருந்து பார்த்தால் முஸ்லிம் பெண் மக்கள் ஆற்றில் குளிக்கச் செல்லும் இடம் தெரிவதாகவும் அதனால் கோவில் இங்கே இருக்கக் கூடாது என்றும் பிரச்சனை செய்தார்கள் .அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு கோவிலில் அபிவிருத்திகள் செய்யக்கூடாது என்று பிரச்சனை செய்துள்ளனர் . மேலும் உண்மை விவரங்களை மறைத்து புறம்போக்கில் புதியதாக கோவில் கட்டி இருப்பதாக அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர் .அதனடிப்படையில் முறையான விசாரணை செய்யாமல் எந்த அறிவிப்பும் கொடுக்காமல் , பட்டா நிலத்தில் ஏற்கனவே காலம் காலமாக வழிபாடு செய்துவந்த கோயிலையும் அதிலிருந்த பீடங்களையும் காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் சார் ஆட்சியர் கிராம நிர்வாக அதிகாரி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி வாகனத்தை வைத்து தரைமட்டமாக இடித்துள்ளனர் .மேலும் பட்டா இடத்தில் கோவில் கட்டக்கூடாது என்றும் கூறி வருகிறார்கள் , பட்டா நிலத்தில் கோவில் கட்டுவதில் எந்தத் தடையும் கிடையாது . இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு புறம்போக்கில் கட்டியதாகவும் வரைபட அனுமதி இல்லாமல் பட்டா நிலத்தில் கட்டியதாகவும் ஏதேதோ காரணங்களை கூறி வருகிறார்கள் .முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருப்பதால் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இந்துக்கள் காலம் காலமாக வணங்கி வந்த கோவிலையும் அதிலுள்ள பீடத்தையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர் . இதனால் அந்த ஊரில் இந்துக்கள் அனைவரும் மிகுந்த மனவேதனையுடன் இருந்து வருகிறார்கள் .பட்டா இடத்தில் உள்ள கோவிலை முஸ்லிம்களின் தூண்டுதல் காரணமாக எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல் ( யாருக்கும் முறையாக தபால் அனுப்பாமல் ) இடித்து தரைமட்டமாக்கிய தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் .தாயகப் பணியில்V.P.ஜெயக்குமார்மாநில துணைத் தலைவர்இந்துமுன்னணி