15.04.2020
பத்திரிகையில் அறிக்கை
தமிழகத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் கூழ் ஊற்றுவதற்கு தமிழக அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும்
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்ற காரணத்தினால் அரசாங்கமே கூழ் காய்ச்சுவதற்கு உண்டான அரிசி மற்றும் தானியங்களை
இலவசமாகக் கொடுத்தது உதவ வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக்கொள்கின்றது.
கடந்த காலங்களில் இது போன்ற கொள்ளை நோய்கள் வந்த போது” குறிப்பாக பிளேக் நோய் வந்தபோது தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த நோயிலிருந்து விடுபட வேண்டி சிறப்பு வேண்டுதல்களை வைத்து ப்ளேக் என்ற பெயரிலேயே பல பிளேக் மாரியம்மன் கோவில்கள் நிறுவப்பட்டு
அவற்றில் வழிபாடுகள் நடத்தப்பட்டன என்பது கடந்த கால வரலாறு. இது இந்துக்களுடைய நம்பிக்கை.
ஆகவே தமிழக அரசாங்கம் தற்போது இந்துக்களின் பெரும் நம்பிக்கையான சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவிலில் கூழ் ஊற்றும்
நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பதுடன் அதற்குண்டான தானியங்கள்” அரிசி போன்றவற்றை கொடுத்து உதவ வேண்டும்”
மேலும் கூழ் வினியோகிக்க ஏதுவாக அரசாங்கமே தகுந்த சமூக இடைவெளியை பின்பற்றக்கூடிய ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும். அல்லது தன்னார்வலர்கள் கையில் அதை ஒப்படைக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது”
உடனடியாக இந்த நடவடிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என்று இந்துக்களும் மற்றும் இந்துமுன்னணி இயக்கமும் ஆவலோடு
எதிர்பார்க்கிறது.
தாயகப் பணியில்
காடேஸ்வரா சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்