Daily Archives: April 13, 2020

நம்பிக்கையோடு புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். ஸ்ரீ சார்வரி புத்தாண்டு வாழ்த்துக்கள் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

13.04.2020

சோதனை ஒழியட்டும் – நாடு செழிக்கட்டும் – நம்பிக்கையோடு புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். ஸ்ரீ சார்வரி புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் அறிக்கை

நாடு கொரானா எனும் கொடும் நோயின் பிடியில் சிக்கித் தவித்து வரும் இந்த சூழ்நிலையில் இனி பிறக்கின்ற ஸ்ரீ சார்வரி ஆண்டு இந்த நோயினை அழித்து மக்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கின்ற ஆண்டாக இருக்க வேண்டுமென அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்வோம்.

பொருளாதாரப் பிரச்சனையிலிருந்து மக்கள் அனைவரும் மீண்டு, சகல விதமான செல்வங்களையும் இந்த ஆண்டில் பெற இறைவன் அருள்புரிய வேண்டும்.

நம்முடைய பண்பாட்டு ரீதியிலான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களை அனைவரும் கடைபிடிக்க இந்த ஆண்டில் சபதமேற்போம்.

நமது வாழ்க்கை முறை மற்றும் நமது பழைய உணவு பழக்கவழக்கங்கள் நம்மையும் நம் சந்ததியினரையும் இது போன்ற கொடிய நோய்களிடமிருந்து காப்பாற்றும்.

நம்பிக்கையோடு புத்தாண்டில் காலடி எடுத்து வைப்போம். பிறக்கின்ற புத்தாண்டு அனைத்து விதமான சோதனைகளையும் சாதனைகளாக மாற்றுகின்ற ஆண்டாக அமையட்டும்.

அனைவருக்கும் சித்திரை 1 சர்வாரி ஆண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் தாயகப் பணியில்

காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

வீட்டை கோவிலாக்கி வழிபாடு நடத்துவோம் – வீரத்துறவி இராம கோபாலன்… புத்தாண்டு செய்திகள்

இராம கோபாலன்
நிறுவன அமைப்பாளர்
இந்து முன்னணி, தமிழ்நாடு
59, ஐயா முதலித் தெரு,
சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.
தொலைபேசி: 044-28457676
பத்திரிகை அறிக்கை
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
வீட்டை கோயிலாக்கி வழிபாடு நடத்துவோம்..
தமிழர்களாகிய நமக்குப் புத்தாண்டு, சித்திரை 1ஆம் தேதி. அன்று குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்று விசேஷமாக வழிபாடு நடத்துவது நமது மரபு.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக உலகமே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில் நமது பாரம்பர்யத்தை கைவிடலாமா?
எனவே, புத்தாண்டு வழிபாட்டை நமது வீட்டில் உள்ளோர் அனைவரும், இந்த உலகமும், நமது புண்ணிய பூமியும் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு நல்ல நிலையில் வாழ புத்தாண்டான சித்திரை (14.4.2020) 1ஆம் தேதி அன்று விளக்கேற்றி வைத்து குடும்பத்துடன் பிரார்த்தனை செய்வோம்.
அனைவருக்கும் இந்து முன்னணியின் புத்தாண்டு வாழ்த்துகள். வாழ்வில் எல்லா வளமும், நலமும் பெறவும், இந்த தீய சூழலில் இருந்து மீண்டு, வளம் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்து வாழ்த்துகிறேன்.
நன்றி,
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)
நிறுவன அமைப்பாளர்

கொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்

V.P.ஜெயக்குமார்
மாநில துணைத்தலைவர்
இந்து முன்னணி
9443382380

கொரானா நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் சேவை பணிகளில் ஈடுபடக்கூடாது என்ற முதல்வரின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய இந்து முன்னணி வேண்டுகோள்

கொரானா பாதிப்பு காரணமாக கடந்த 21 நாட்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர் தொழிலின்றி வருமானமின்றி ஏழை எளிய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கோடு பல்வேறு இடங்களில் உதவி பணிகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் சேவாபாரதி போன்ற அமைப்புகள் இந்த கொரானா நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெருமளவில் சேவைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேவை பணிகளை தனிநபர்கள் தனி இயக்கங்கள் செய்யக்கூடாது அரசு மூலமாகத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்தார் அதனைத் தொடர்ந்து இன்றைய தமிழக முதல்வர் அவர்கள் தமிழகம் முழுவதும் தனியார் அமைப்புகள் தனிநபர்கள் யாரும் எந்த சேவை பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்

இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் அரசாங்கமும் அரசு இயந்திரமும் ஒவ்வொரு தனி நபரையும் தேடிச் சென்று அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.

மேலும் இதுபோன்ற சேவைப் பணிகளில் தனியார் அமைப்புகள் ஈடுபடுவதால் அரசாங்கம் மருத்துவம் போன்ற வேறுவேறு பணிகளில் தனது கவனத்தை செலுத்த முடியும்

வழக்கமாக பேரிடர் காலங்களில் தனியார் அமைப்புகள் சேவை செய்வது வழக்கமான ஒன்றாகும் இன்றைய நிலையில் சேவை செய்ய இயலாத சிலருடைய தூண்டுதலின்பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்குமோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது

எனவே பேரிடர் காலங்களில் வழக்கம்போல் நிவாரணப் பணிகளில் தனியார் அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் இது தமிழக அரசுக்கும் அரசு இயந்திரத்திற்கும் மிகவும் பேருதவியாக அமையும் என்றும் இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.