Monthly Archives: February 2020

இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை? – இணைவீர் இந்துமுன்னணி

இந்து முன்னணி ஏன்? எதற்கு தேவை?

இது அரசியல் கட்சி அல்ல –
இது இந்துகளுக்கான அமைப்பு

1. நமது உறவினர்களும், நண்பர்களும் மதம் மாறாமல் இருக்க…. தடுக்க

2. இந்துக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சட்ட விரோத வழிபாட்டு கூடங்கள் உருவாவதைத் தடுக்க

3. இந்துக்களின் பாரம்பரிய திருவிழாக்களில் வேற்று மதத்தினர் தலையீடு இல்லாமல் இருக்க

4. நம் கடவுள்களையும், குலதெய்வங்களையும் இழிவாக பேசுபவர்களை தட்டிக் கேட்க

5. வேற்று மதத்தினரின் தலையீட்டில் திருவிழாக்கள் நின்றுபோகும்போது இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் திருவிழாக்களை நடத்த

6. நம் பெண் பிள்ளைகள் வேற்று மதத்தினரின் திட்டமிட்ட நாடக காதலில் விழாமல் (லவ் ஜிகாத்) விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பாற்றிட

7. பள்ளிகளில் நம் சமயம் சார்ந்த பூ, பொட்டு, வளையல் அணிந்து வருவதற்கு மட்டும் தடை விதிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளை எதிர்த்து கேள்வி கேட்க

8. கோவில் கும்பாபிஷேகம், கோவில் சார்ந்த விழாக்களை தடுக்கும் அறநிலையத்துறை மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்த்து சட்ட ரீதியாக போராடி விழாவினை நடத்த

9. கோவில் மற்றம் கோவில் நிலங்களை பாதுகாக்க

10. தினமும் நமது கிராம கோவில்களில்
ஓரு வேளையாவது விளக்கு எரிய ( ஏற்றிட)…

11. நமது இந்துக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எந்த அரசியல்வாதியும் முன் வரமாட்டார்கள் அப்போது நம்மை பாதுகாத்திட , நமக்காக வாதாட, போராட, பரிந்து பேச இந்து முன்னணி மட்டுமே உள்ளது.

12. கட்சியால் பிளவு பட்டாலும்
மதத்தால் ஒன்று படுவோம்

13.இந்துமதத்தின்பெருமைகளயும் ,அதற்கு வரும் ஆபத்துகளையும் தெரிந்து கொள்ள… புரிந்து கொள்ள

நாம்
நமது ஊர் கோயில்களில்
நாம் வாரந்தோறும் சந்திக்க…..
இணைவீர்…..இந்து முன்னணியில்…

தேசம் காக்க, தெய்வீகம் காக்க

தர்மம் காக்க அதர்மம் அகற்ற
இந்துமுன்னணி
தமிழ்நாடு

தொடர்புக்கு

hmrss1980@gmail.com

9047027282

முடியாததை!! முடித்து காட்டியது !! இந்து முன்னணி – தூத்துக்குடியில் இந்து ஒற்றுமையின் வெளிப்பாடு

முடியாததை!!
முடித்து காட்டியது !!
இந்து முன்னணி .

எங்கே…?என்ன….?

தூத்துக்குடி மாநகர்
மேட்டுப்பட்டி, முத்தரையர் நகர் திரேஸ்புரம்(பெரிய ஊர்),விவேகானந்தர் நகர் (கரைவலை),புதிய துறைமுகம்( சுனாமி காலனி). இந்த ஊர்களை இந்து முன்னணி ஒருங்கிணைத்தது ….எதற்காக?

1.முத்தரையர் நகர் மீனவர்களை மணப்பாடு,ஆலந்தலை,போன்ற ஊர்களில் கிறிஸ்தவ மீனவர்கள் அவர்கள் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என்று இந்து மீனவர்களின் படகுகளை பிடுங்கி வைத்து கொண்டனர்.

பாதிரியார் தலைமையில் கிறிஸ்தவ மீனவர்கள் பஞ்சாயத்து செய்து ஒரு லட்ச ரூபாயை கிறிஸ்துவ சர்ச்க்கு அபதாரமாக கொடுத்தபின் படகுகளை விடுவித்தனர். தகவல் அறிந்த இந்துமுன்னணி இந்த விஷயத்தில் களமிறங்கியது. மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,மீன்வளத்துறை அமைச்சர் ,ஆகியோரிடம் மனுக்களை கொடுத்த பின் இன்றுவரை அந்த ஊர் மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

2. தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகத்திற்கு தீர்த்த நீரெடுக்க சங்கு முக விநாயகர் ஆலயத்திற்கு செல்வதுதான் வழக்கம்.
அந்த கோவில் மிகவும் பாழடைந்து இடிந்து விழும் தருவாயில் இருந்த நேரத்தில் தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி இதில் தலையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்து பின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக அந்த ஆலயம் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

3.தூத்துக்குடி துறைமுகம் சார்பாக அந்தப் பகுதியில் 40 லட்சம் மதிப்பில் கழிப்பறை, குளியலறை,வலைக் கூடம்,மீனவர்களுக்கான உபகரணங்கள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.

4.விவேகானந்தர் நகர் (கரைவலை) பகுதி மீனவர்களை கிறிஸ்துவ மீனவர்களால் மீன் பிடிக்க கூடாது என்று தடை விதித்த போது மீன்வளத்துறை இணை இயக்குனரிடம் நேரடியாக சென்று இது சம்பந்தமாக பேசி இந்தப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த ஊர்களையெல்லாம் இணைத்து நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவினை இந்து முன்னணி சார்பாக மிகவும் கோலாகலமாக கொண்டாடியது.

அறநிலையத்துறையே பொருளாதார தீண்டாமையை உடனே நிறுத்து – இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் V.P. ஜெயக்குமார் அறிக்கை

அறநிலையத்துறையின் திருக்கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வாங்குவது என்பது இந்துக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை ! அதுவும் அதிக காசு கொடுப்பவர்களுக்கு ஒரு வசதியும், காசு கொடுக்க முடியாத ஏழைகளுக்கு ஒரு எந்த வசதியின்மையும் என்பது மட்டரகமான செயல்பாடு !

இது அரசாங்கமும் அறநிலையத்துறை செய்கின்ற அநியாயம் ! அட்டூழியம் ! அக்கிரமம் !

மேலும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி கடந்த பல வருடங்களாக இந்து முன்னணி போராடி வரும் சூழ்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல இப்பொழுது திருச்செந்தூர் அறநிலைத்துறை 250 ரூபாய் தரிசனகட்டணம் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்டும் இலை விபூதி பிரசாதம் கொடுப்பதாக அறிவித்துள்ளது .

இது இந்துக்களை ஏமாற்றும் கீழ்த்தரமான செயலாகும் . இதை உடனே திருச்செந்தூர் அறநிலையத்துறை தடுத்து நிறுத்த வேண்டும் .

இந்த பொருளாதார தீண்டாமை இந்துக்களை பிளவுபடுத்தி இந்துக்கள் உள்ளேயே ஒரு வெறுப்பு வேற்றுமையை உருவாக்கும்சதி செயலாகும் .

உடனே இதை தடுத்து நிறுத்தாவிட்டால் இந்து முன்னணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது .

அறநிலையத்துறையின் இந்த கொடுமையான செயல்திட்டத்தை ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் கண்டிக்க கூட முன்வராதது இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாகும் !

இந்த கேடுகெட்டதனம் உடனே தடுத்து நிறுத்தப்பட்டாவிட்டால் திருச்செந்தூர் அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் . ஆகவே தமிழக அரசும் அற நிலைய துறையும் உடனே இந்த பொருளாதார தீண்டாமையை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்து முன்னணி கோருகிறது.

தாயகப் பணியில்

V P ஜெயக்குமார்

மாநில துணைத் தலைவர்

பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் – இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கை செய்தி

இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சி .சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கை செய்தி

வணக்கம்.

திரைப்பட நடிகர் யோகிபாபு அவர்கள் நடித்து வெளிவர உள்ள காக்டெய்ல் என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது .

இந்த விளம்பரத்தில் தமிழ் கடவுள் முருகனின் போன்று யோகிபாபுவின் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது .மது வகைகளின் பெயரைத் தாங்கி வரும் திரைப்படம் ஒன்றிற்கு முருகப்பெருமான் போல வேடமணிந்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது முருக பக்தர்களையும், இந்துக்களின் மனதையும் புண்படுத்தும் விதமாக உள்ளது .

சம்மந்தப்பட்ட திரைப்படத்தின் தயாரிப்பாளர், டைரக்டர் மற்றும் யோகி பாபு ஆகியோர் இந்த செயலுக்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நடிப்புத்துறை, கலை என்ற பெயரில் இந்து கடவுள்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் தொடர்ந்து புண்படுத்தும் போக்கு தமிழ் திரைப்படத்துறையில் வாடிக்கையாக உள்ளது.

இதே போன்று மற்ற மத விஷயங்களை கிண்டல் செய்ய இவர்களுக்கு தைரியம் இருக்கிறதா? இந்துக்கள் தட்டிக் கேட்க ஆரம்பித்தால் இந்துக்களை புண்படுத்தும் தமிழ் திரையுலகம் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

ஆகவே உடனடியாக மன்னிப்பு கேட்பதுடன் விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

தாயக பணியில்
சி.சுப்பிரமணியம் மாநிலத்தலைவர் ஹிந்து முன்னணி

வேலூரில் இந்து ஆட்டோ முன்னணி மாநில செயற்குழு

#இந்துமுன்னணி பேரியக்கத்தின் ஒரு அணியாக செயல்பட்டு வருகின்ற இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் துவங்கியது இந்து முன்னணி இயக்கத்தின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் மனோகர் கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் கோட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.அரசிடம் இருந்து பெறக்கூடிய நலத்திட்ட உதவிகள் குறித்தும், சமுதாய பாதுகாப்பில் ஆட்டோ ஓட்டுனர்களின் பங்களிப்பு குறித்தும் பேசப்படுகிறது.மேலும் ஆட்டோ ஓட்டுனர்களின் பாதுகாப்பு, காவல்துறை சார்ந்த பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வும் நடத்தப்படுகிறது….

பயங்கரவாதத்திற்கு தீர்வு?

பாரிஸில் “சார்லி ஹெப்டோ‘ பத்திரிகை அலுவலகத்தில் புதன்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில், அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, ஒரு பெண் காவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலை நடத்தித் தப்பிச் சென்ற இருவர் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டனர். தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் அவ்விருவரும் கொல்லப்பட்டனர்.

இவர்களின் கூட்டாளியாகச் செயல்பட்ட அமேடி கூலிபலி, யூத பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளை சிறைப்பிடித்தார். இந்த சம்பவத்தில் பிணைக்கைதிகளாக இருந்த 4 யூதர்கள் கொல்லப்பட்டனர். போலீஸார் அங்கு நிகழ்த்திய தாக்குதலில் கூலிபலி கொல்லப்பட்டார்.

அவருடைய கூட்டாளியான ஹையட் பூமடியன் எனும் பெண்ணை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பிரான்ஸ் எல்லையைக் கடந்து, துருக்கி வழியாக சிரியாவுக்குத் தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது

பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாத படுகொலைகள் இஸ்லாமிய மதத்தின்  உண்மை சொரூபத்தை  உலகிற்கு எடுத்துக் காட்டியது. 

எங்கெல்லாம் இஸ்லாமிய மக்கள் தொகை அதிகமாகிறதோ அங்கெல்லாம் அவர்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல் தனித்து இயங்கி தேசத்தின் சுதந்திரத்திற்கு, இறையாண்மைக்கு, ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக ஆவார்கள் என்ற வரலாற்று உண்மை மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

சுதந்திரம்(தனி மனித ), சமத்துவம் , சகோதரத்துவம் , விமர்சனம் செய்வதற்கான உரிமை என்ற ஜனநாயகத்தின் அத்துணை கூறுகளையும் தகர்த்து  எறியக்கூடிய “ஜிகாத்” எனும் மதவாத அசுர சக்தியை உலகம் காணத் துவங்கியுள்ளது. உலகை அச்சுறுத்தும் மிகக் கொடிய நோயாக ஜிகாத் பயங்கரவாதம் மாறி வருகிறது.

இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர் ; அதே சமயம் பயங்கரவாதிகள் அனைவரும் இஸ்லாமியர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.எள்ளளவும் சகிப்புத்தன்மையற்ற ஒரு சமுதாயமாக இஸ்லாம் ஆகி வருகிறது.

இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு  எந்தவித அரசியல் முகமும் கிடையாது. தேசம், பண்பாடு, கலாசாரம்  எனும் அடிப்படையும் கிடையாது. உலகை இஸ்லாமிய மயமாக்க வேண்டும் எனும் அடிப்படைவாத கருத்தை முன்னிறுத்தி பயங்கரவாத படுகொலைகளை அரங்கேற்றி அச்சுறுத்தும் செயலே முன்னிறுத்தப்படுகிறது.

அமெரிக்கா சந்தித்த அல் – குவைதா தாக்குதல், இந்தியாவில் நடந்த மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் உட்பட சிரியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்தவை, நடப்பவை என அனைத்தும்  மத நம்பிக்கை என்ற பெயரில் எழுந்த மதவெறித் தாக்குதல்கள்.

அதற்கு அடிப்படையாக மதநம்பிக்கையுடன், இணையதள தகவல் மூலம் ஒருங்கிணைப்பு, அதற்கேற்ப சந்தை பொருளாதாரம் மூலம் பண பரிவர்த்தனை, ஹவாலா, போதைப்பொருள் கடத்தல்  ஆகியவை சேர்வதால், இவற்றை எளிதில் கண்டறிவது  அல்லது தடுப்பது மிகுந்த சவாலாக அனைத்து நாடுகளுக்கும் இருக்கிறது.

எனினும் இந்த சம்பவங்களுக்குப் பிறகு இத்தகைய பயங்கரவாத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை உலகநாடுகள் (குறிப்பாக – பிரிட்டன்,ஜெர்மன்,பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா)  சிந்திக்க ஆரம்பித்துவிட்டன.

அதே சமயம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில், சில  தினங்களுக்கு முன் நடந்த பேரணி, உலகின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இது பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தாக அமைந்தது. பயங்கரவாதத்தை அனுமதித்து, சுதந்திரத்தை அழிக்க அனுமதிக்க முடியாது என்ற இந்த அமைதிப் பேரணி, உலகிற்கு புதிய செய்தியை சொல்லியிருக்கிறது.

ஒன்றிணைந்த மக்கள் சக்தியே இத்தகைய பயங்கரவாத செயல்களை வேரறுக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறது.

எந்த நாடாயினும் பெரும்பான்மை மக்கள், பலம் மிக்கவர்களாக, ஒற்றுமை மிக்கவர்களாக இருப்பதன் அவசியம் உணர்ந்தால் இத்தகைய பாதிப்பு ஏற்படாது என்பது உண்மை.

பாரதத்தில் உள்ள பெரும்பான்மை மக்கள்  ஜாதி, இன, மொழி வேற்றுமை கடந்து  இந்துக்கள் எனும் ஓருணர்வில் ஒன்றிணைந்து  செயல்படவேண்டியது அவசியம் என்பதை பாரிசில் நடந்த பேரணி வலியுறுத்துகிறது.

ஏறிக்குதித்திட ஒரு ஏழடிச்சுவர் – பாரதி பாஸ்கர் பட்டிமன்ற பேச்சாளர்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று அபூர்வமான ஆராய்ச்சிகள் நடக்கும்போது பல பேர் வலைதளங்களில் பதிவிட்டார்கள் -“தீவிரவாதிக்கு மதம் இருக்க முடியாது; தீவிரவாதி செலுத்தப்பட்டவன்; அவனுக்கு எண்ணங்கள் இல்லை, உணர்ச்சிகள் இல்லை, சரி-தவறு என்கிற பேதங்கள் இல்லை. அவன் வில்லில் இருந்து எய்தப்பட்ட அம்பு’ – என்று.

சரி, தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்? பெரும்பாலும் குரலற்றவர்கள். தீவிரவாதத்தினால் இறந்தவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் எனின், உயிரோடு பிழைத்தவர்கள், பாரம் சுமப்பவர்கள். ஆன்மாவோடு பிணைந்த உறவுகளை, உடைமைகளை, உடலின் பகுதிகளை பறி கொடுத்த பின்னும், குமுறும் உள்ளங்களோடு சிதறிய மிச்ச வாழ்வை வாழ்ந்து தீர்ப்பவர்கள்.தீவிரவாதியின் மதம் பற்றிப் பேசுவதைவிட, பாதிக்கப்பட்டவரின் மனம் பற்றிப் பேசலாம் – சிதறிய பின்னும் எழுந்து நின்ற மனங்கள் !

‘நாடியா முராட்’ போல…
சரியாக மூன்று வருஷம் முன்பு – 2016-ஆம் ஆண்டு மே மாதம், நாடியா முராட்-அமால் க்ளூனி சந்திப்பு நடந்தது. இருவரும் பெண்கள் என்பதைத் தாண்டி எந்த ஒற்றுமையும் இல்லாதவர்கள். இரு வேறு துருவங்கள்.

அமால் பிரமிக்க வைக்கிற பேரழகுப் பெண். சரியான உயரமும் விளம்பர மாடல்களின் உடல் அமைப்பும் கொண்டவர். அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளைப் பற்றிய தகவல்களைப் பகிர ஒரு இணையதளமே (“வெப்சைட்’) இருக்கிறது. ஆக்ஸ்போர்டு- இல் படித்து , நியூயார்க்கில் வழக்குரைஞர் தொழில் செய்யும் மாபெரும் பணக்காரப் பெண்.

இது போதாது என்று பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியை மணந்திருக்கிறார் (“யார் ஜார்ஜ் க்ளூனி என்று யோசிக்கிறீர்களா? – நம்ம “தல’ அஜித் மற்றும் நம் பிரபல நடிகர்களுக்கு “சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலை’ சொல்லிக் கொடுத்த நடிகர், ஆஸ்கர் விருது பெற்றவர்). அமால் எங்கே போனாலும் ஆயிரம் பேராவது வந்து “ஆட்டோகிராப்’ கேட்பார்கள்.

நாடியா முராட்- யாராலும் கவனிக்கப்படாது கடந்து போகிறவர். ஏழை இராக்கியப் பெண். அதிகம் படிக்காதவர். சிறிய உடலமைப்பும், தலையைத் தூக்கி, கண்களைப் பார்த்துப் பேச முடியாத தயக்கமும் கொண்ட சிறு பெண்.
இந்த இரண்டு பேரும்தான் தீவிரவாதத்துக்கு எதிரான மாபெரும் போரை அறிவித்திருக்கிறார்கள்-இரண்டு தனி மனிதர்களாக இணைந்து!

இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ள நாடியாவின் வாழ்க்கையை நீங்கள் அறிய வேண்டும்.

இராக்கின் அழகான கிராமம் கோச்சோ. சிஞ்சார் என்கிற மலையின் பக்கத்தில் இருக்கிறது. “யஸீதி’ என்கிற மதத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் கிராம மக்கள். யஸீதிக்கள் மயில் வடிவில் பூமிக்கு ஒரு இறைத் தூதர் வந்தார் என்றும், அவர்தான் இந்த உலகுக்கு வண்ணங்களைத் தந்தார் எனவும் நம்பும் மக்கள். மயிலை வணங்குகிறவர்கள். சுற்றிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள். எல்லாரும் நேசமாய் வாழ்ந்தார்கள்-அந்தக் கிராமத்தை “ஐஎஸ்ஐஎஸ்’ தீவிரவாதிகள் ஒருநாள் சுற்றிவளைக்கும் வரை.

தீவிரவாதிகள் வந்தவுடன் ஆண்களும் பெண்களும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டனர். 312 ஆண்கள் ஒரு மணி நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் நாடியாவின் 6 சகோதரர்களும் அடக்கம்.

பெண்களில் வயதான பெண்கள் தனியாகவும், இளம் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டனர். வயதான பெண்கள் உடனே கொல்லப்பட்டனர். நாடியாவின் அம்மா அப்போதுதான் இறந்திருக்க வேண்டும்.

இளம் பெண்கள் ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டு மோசூல் என்கிற நகரத்துக்குக் கொண்டு போகப்பட்டனர்-துப்பாக்கி முனையில். தன் குடும்பத்தில் ஏழு பேரை இழந்த நாடியாவுக்கு அழுவதற்கு நேரம் இல்லை அப்போது.

அன்று மோசூல் முழுவதும் “ஐஎஸ்ஐஎஸ்’ கட்டுப்பாட்டில் இருந்தது. அழைத்துவரப்பட்ட இளம் பெண்கள் ஏலம் விடப்பட்டனர் பாலியல் அடிமைகளாக… நாடியாவை ஏலத்தில் எடுத்தவன் ராட்சஸன் போல இருந்தான். அழுதாள் நாடியா-கொஞ்சம் சின்னவனாக இருந்த இன்னொருவனைத் தன்னை ஏலத்தில் எடுக்கச் சொல்லி. அவன் காலில் விழுந்து கதறினாள்.

எந்த ஓர் உயிரும், ஒரு வாழ்வும் இதைவிட கீழான நிலைக்குப் போக முடியாது என்று ஒரு புள்ளி உண்டா? உண்டென்றால் அன்று நாடியா அந்தப் புள்ளியில்தான் இருந்தாள்.

அந்த இரவில்தான் அவளுடைய உண்மையான தண்டனை ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட 90 நாள்கள். ஒரு பெண்ணின் உடலையும் மனதையும் ஆன்மாவையும் சுட்ட தீவிரவாதிகளின் கோர நடனம் அங்கே நடந்தது. கை மாறி மாறி ஏலத்தில் விடப்பட்ட நாள்கள். இரவா, பகலா என அறியாத பயங்கர நாள்கள். தப்பிக்க நினைத்தால் கொடும் தண்டனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட நாள்கள்.

ஒரு முறை, நெடுஞ்சாலையில் இருக்கும் டோல் பூத்தில் அடைக்கப்பட்டாள் நாடியா. சுற்றிப்போகும் வாகனங்களின் அதிர்வுக்கும், மோசூல் நகரின் தகிக்கும் பாலைவன வெப்பத்துக்கும் நடுவே, போகும் வரும் வண்டியில் இருப்பவர்கள் எல்லாம் அந்தச் சிறிய இடத்திற்குள் வந்து… போக…

சிதறிய ரத்தத்துக்கும் குமட்டி குமட்டி எடுத்திருந்த வாந்திக்கும் இடையே கிடந்தது அந்தப் பெண் உடல்.

கடைசியாக ஏலத்தில் எடுத்தவன் சாவின் விளிம்பில் இருந்த நாடியாவிடம் அறிவித்தான்-நாளை அவளை சிரியாவுக்கு கூட்டிப் போய் அங்கே ஏலத்தில் விடப்போவதாக…எழக்கூட முடியாமல் இருந்தவளை வீட்டில் வைத்து விட்டு கதவைப் பூட்டாமல் போனான் அவன் – சாகப் போகிறவளால் எப்படி தப்பிக்க முடியும் என்று…

உயிரின் கடைசித் துளி வாழும் இச்சை-அதுதான் நாடியாவுக்கு எழுந்து நிற்கும் சக்தியைக் கொடுத்திருக்க வேண்டும். எழுந்து வீட்டின் பின்னே வந்தாள். ஏழடி உயர “காம்பவுண்ட்’ சுவர் கொண்ட வீடு அது. 90 நாள்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருந்த 19 வயது சின்னஞ்சிறு பெண் நாடியா அந்த ஏழடிச் சுவரைத் தாண்டிக் குதித்தாள். அவள் உயரம் நாலடி சில அங்குலங்கள்தான்!

அப்புறம்…? அப்புறமென்ன…இரண்டரை மணி நேரம் இருட்டில் நடந்து, ஏதோ ஒரு வீட்டின் கதவைத் தட்டி அடைக்கலம் கேட்டு, அவர்கள் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்புக்கு எதிரானவர்கள் என்பதால் அவர்களால் காப்பாற்றப்பட்டு , எஞ்சியிருந்த ஒரே ஒரு அண்ணனைச் சந்தித்து, அகதிகள் முகாமில் வாழ்ந்து, தன்னைப்போல போர் அடிமைகளாய் “ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பினால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களைக் காப்பாற்ற முடிவு எடுத்து, அமால் க்ளூனியைச் சந்தித்து, அவரின் உதவியுடன் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலுக்குப் போய், தனக்கும் மற்ற பெண்களுக்கும் நேர்ந்ததைப் பேசி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி-பெண்களை அழிக்கும் “ஐஎஸ்ஐஎஸ்’ தலைமைக்கு எதிரான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறாள் நாடியா. 2018-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவளும் அவள்தான்.

பரிசு பெற்றதற்கான பாராட்டுகளை ஏற்க நேரம் இல்லாமல் அவளும் அமால் க்ளூனியும் தொடர்ந்து தங்கள் போராட்டக் களத்தில் நிற்கிறார்கள்.

நாடியாவின் வாழ்க்கையை நினைக்கும் போதெல்லாம் எனக்கு அந்தச் சுவரைப் பார்க்க வேண்டும் போல இருக்கிறது. அதன் அருகில் நின்று கொண்டு நாடியாவிடம் கேட்கவேண்டும் – “அந்த ஏழடிச் சுவரை நோக்கி ஓடும்போது என்ன நினச்சுக்கிட்டிங்க நாடியா?’

துரத்தப்படும் எல்லாருக்கும் அப்படி ஒரு சுவர் உண்டு. “ஏழடிச் சுவரைத் தாவிக் குதிக்க நாலடி உயரம் போதும்’ என்கிற புதிய பெளதிக விதிகள் பாதிக்கப்பட்டவர்களால் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

எது அமாலயும் நாடியாவையும் இணைத்தது? இரு வேறு உலகங்களைச் சேர்ந்த இரு பெண்கள் . ஒருத்தி பாதிக்கப்பட்டவள். இன்னொருத்தி பாதுகாப்பின் உச்சத்தில் வாழுகிறவள். “பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு முகம் உண்டு’ என்று எழுத்தாளர் அம்பை சொல்லுவார்.

“அவர்களுக்கென்று ஒரு குரல் உண்டு. அவர்களின் கைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த முகத்தின் கண்களுக்கு கீழே இருக்கும் கரு வளையங்களை வருட வேண்டும்…’

அமால் அதைத்தான் செய்திருப்பார். அப்புறம்தான் அவர்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு போவதைப் பற்றிப் பேசியிருப்பார்கள்…

எனக்கும் அப்படிச் செய்ய வேண்டும் போல இருக்கிறது. புல்வாமாவில் இறந்த வீரர்களின் மனைவிகளின் கைகளை, குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் கைகளை, நியூஸிலாந்து கிறைஸ்ட்சர்ச் மசூதிகளில் தன் இனியவர்களை இழந்த பெண்களின் கைகளை, கொழும்பில் சிதறிய உடல்களின் அருகே அமர்ந்து கதறியழும் பெண்களின் கைகளை, இன்னமும் சிரியாவிலும் இராக்கிலும் பாலியல் அடிமைகளாய் விற்கப்படும் பெண்களின் கைகளை…

தீவிரவாதிக்கு மதம் உண்டா? எனக்குத் தெரியாது, ஆனால், தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதம் இல்லை…உண்மையில் அவர்களுக்கு எதுவுமே இல்லை.

நாம் நம் கைகளை நீட்டினால் பிடித்துக்கொள்ள அவர்களுக்கு விரல்கள் மட்டும் உண்டு.