Daily Archives: August 7, 2018

இராம.கோபாலன் அவர்கள் அறிக்கை – திரு. மு. கருணாநிதி அவர்கள் மறைவுக்கு  இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது

இராம கோபாலன்

நிறுவன அமைப்பாளர்

இந்து முன்னணி, தமிழ்நாடு

59, ஐயா முதலித் தெரு,

சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2.

தொலைபேசி: 044-28457676

7-8-2018

பத்திரிகை அறிக்கை

திராவிட முன்னேற்றக் கழகத்

தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள் மறைவுக்கு

இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவருமான திரு. மு. கருணாநிதி அவர்கள், மூப்பின் காரணமாக காலமாகியுள்ளார்.

அவரது மறைவுக்கு இந்து முன்னணி சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துகொள்கிறோம்.

அவரது பிரிவால் துயருரும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழக பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்

(இராம கோபாலன்)