இந்துமுன்னணி இளைஞர் பிரிவான இந்து இளைஞர் முன்னணி நடத்திய, தேசிய இளைஞர் தினம் முன்னிட்டு நடைபெற்ற துவக்க விழா கருத்தரங்கு நிகழ்வில் பேசிய பிரபல இசை அமைப்பாளர் கங்கை அமரன் குல தெய்வ வழிபாடு செய்வது மிக முக்கியமான விஷயம் என்றார்.
தமிழகம் மட்டுமல்ல இந்தியா முன்னேற்றம் அடைய இளைஞர் எழுச்சி பெற வேண்டும் என்றார்.
இந்த விழாவில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, மாநி செயலாளர் கிரண்குமார் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .