இந்து முன்னணி மீது பொய் குற்றச்சாட்டு கூறும் மதவாத, பிரிவினைவாத அமைப்புகளைக் கண்டிக்கிறோம்  – வீரத்துறவி   

அரியலூர் சிறுகடம்பூர் கிராமத்தில் நந்தினி என்ற பெண் மானபங்கப்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என சிலரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அதில் சம்பந்தப்பட்டுள்ள மணிகண்டன், முன்பு இந்து முன்னணியின் பஞ்சாயத்துப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர் என்பதைக் காரணம் காட்டி இந்து முன்னணி அமைப்பின் மீது களங்கத்தை ஏற்படுத்திட இஸ்லாமி அமைப்புகள், கட்சிகள், தி.க., இடதுசாரிகள், விடுதலை சிறுத்தை கட்சி போன்றவை முனைவதை வன்மையாக் கண்டிக்கிறோம்.
இந்த வழக்கு சம்பந்தமான செய்தி வெளியிட்ட ஊடகங்கள், அதில் குற்றம் சாட்டப்பட்ட நபர் முன்பே இந்து முன்னணி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர் என்பதையும் தெளிவாகத் தெரிவித்துள்ளன. இருந்தும் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் சமூக ஊடகங்களிலும், பத்திரிகை அறிக்கைகளிலும், பொதுக்கூட்டங்களிலும் இந்து முன்னணி பேரியக்கத்தை சம்பந்தப்படுத்தி இஸ்லாமிய அமைப்பினரும், இடதுசாரி, விடுதலை சிறுத்தை கட்சினர் பேசிவருவது உள்நோக்கம் கொண்டது. பொய் பிரச்சாரம் செய்வோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை இந்து முன்னணி அணுகியுள்ளது.

இந்து முன்னணி பேரியக்கம் இந்து சமுதாய ஒற்றுமைப்பணியிலும், தேசியப் பணியிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு சேவையாற்றிவருகிறது. எந்த ஒரு தனிநபரின் குற்றச் செயலுக்கும் இந்து முன்னணி அமைப்புத் என்றும் துணை போனது இல்லை என்பது காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் நன்கு தெரியும்.

அரியலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் ஜாதிக் கலவரத்தைத் தூண்டவும், வன்முறையை ஏற்படுத்தவும் தி.க. வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி பொன்பரப்பியில் பொதுக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யதுள்ளதாகத் தெரிகிறது. இக்கூட்டத்திற்கு வெளியூரிலிருந்து ஆட்களைக் கொண்டுவர முஸ்லீம் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளாக அறிகிறோம். எனவே, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. 

முஸ்லீம் அமைப்புகள், தி.க., விடுதலை சிறுத்தை உள்பட சில அமைப்புகள் இந்து முன்னணி மீது குற்றம் சுமத்திவருவதை இந்து முன்னணி கண்டிக்கிறது. மேலும் இவ்விஷயத்தில் சட்டரீதியாக பொய் குற்றம் சாட்டு சுமத்துவோர் மீது வழக்குத் தொடுத்துள்ளது என்பதை இவ்வறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *